பயன்கள்

முடக்கத்தான் வளர்ப்பதில் உள்ள 16 பயன்கள்

Posted on

தீபாவளி நெருங்கி கொண்டே வருகிறது. இப்போதே அதற்கான பலகாரங்கள் மற்றும் உணவுகளுக்கான ரெசிபிக்களை கூகுளில் தேட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன் இந்த பண்டிகை தினத்தை சற்று ஆரோக்கியமானதாக கொண்டாட கூடாது? முடக்கத்தானுடன்? வாருங்கள் இந்த பதிவில் முடக்கத்தானின் குணநலன்கள் மற்றும் அதன் வளர்ப்பினை குறித்து பார்ப்போம். இந்திரவல்லி என்ற மறுபேர் கொண்ட முடக்கத்தான் தமிழ்நாட்டில் மிகவுமே பிரபலமான ஒரு கீரை வகை. முன்பெல்லாம் அனைவர் வீட்டின் தோட்டத்திலும் ஒரு களை போல் வளர்ந்திருந்த இது இன்றும் கிராமபுறங்களில் உள்ள […]

எப்படி பராமரிப்பது?

தர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்

Posted on

தொட்டிகளில் தர்பூசணி வளர்ப்பது எப்படி என்பதை பற்றின எங்கள் முந்தின பதிவை  பார்த்து வளர்க்க தொடங்கி விட்டீர்களா? இல்லையா? இப்போதே ஆரம்பிப்போம் வாருங்கள். அதற்கு முன் தர்பூசணி பராமரிப்பு பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. தர்பூசணி செடிகளை(தொட்டிகளில் வளரும்) பராமரிப்பது கொஞ்சம் அதிக வேலை தான். யாருக்கு தான் கூடுதல் வேலை பிடிக்கும்? இருந்தும் அதனால் நாம் நட்ட செடியிலிருந்து நிறைய பழம் கிடைத்தால் நல்லா தானே இருக்கும்! சரி வாருங்கள் தர்பூசணி […]

எப்படி வளர்ப்பது?

தர்பூசணி வளர்ப்பது எப்படி? [கொள்கலங்களில்]

Posted on

கோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால் கொண்டாடுவோம். பொதுவாக தர்பூசணி வளர்க்க நிறைய இடம் பிடிக்கும். ஆனால் கவலை வேண்டாம் நாம் பார்க்க இருக்கும் பதிவின் மூலம் தொட்டிகளிலேயே தர்பூசணிகளை அறுவடை செய்யலாம். நம்மிடம் இடப்பற்றாக்குறை […]

உருளை கிழங்கு

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

Posted on

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

இஞ்சி

இஞ்சியின் ஆரோக்கிய நலன்கள்

Posted on

பக்கவாதம் மற்றும் இருதய நோய் இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை அனைத்திற்குமே இரத்த உறைதலை தடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றை ஒன்றாய் உட்கொண்டால் இவை இருதய நோய்களுக்கும், பக்கவாதத்துக்கும் சக்திவாய்ந்த எதிரியாக இருக்கின்றன.

இஞ்சி

இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

Posted on

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம். 1# பாக்டீரியாக்களால் ஏற்படும் செடியின் வாட்டம் (Bacterial wilt of ginger) அறிகுறிகள் (பச்சை) இலைகள் பாதிக்கப்பட்டு […]

சுற்றுசூழல்

புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

Posted on

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என நிரூபிக்கிறது. நீங்கள் அனைவரும் எதேனும் ஒரு வழியில் புவி தினத்தில் பங்கு பெறலாம். மரக் கன்று நடுதல், அக்கம் பக்கத்தில் விளைந்த காய் கறிகளை கொண்டு […]

எப்படி வளர்ப்பது?

மரம் நடுவதற்கான சரியான வழி முறை

Posted on

மரம் நடுவதற்கான சரியான முறைகளை அறிந்தால், மிக குறைந்த நேரத்தில் அதை செய்து விடலாம். அகலமான் குழி தோண்டுவதன் மூலம் மரம் வேகமாக வளரும். மரத்தின் வேரை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அகலமான குழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைகள் கூறுகின்றன. மண் அடைப்பை தவிர்க்க குழின் ஆழம் வேரின் நீளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது. எங்களது படிப் படியான வழிகாட்டுதல் மற்றும் குறிப்புகளை கீழே காணலாம். மரம் நடுதல் முதலில் மரத்தின் […]

எப்படி வளர்ப்பது?

புதினா வளர்த்தல்(பகுதி-1)

Posted on

தாவரவியல் பெயர்: மெந்தா அர்வென்ஸிஸ் (Mentha arvensis) இவை நறுமணம் நிறைந்தவை, சீக்கிரம் வளர கூடியவை, பசுமை மிக்கவை அது மட்டுமல்லாமல்  பழங்களோடும் காய்கறிகளோடும் இறைச்சியோடும் நன்கு கலக்க கூடியவை. தனக்கென தனி பனிக்கூழ்(ice cream) சுவையும்(flavor) கொண்டவை. இச்செடியுடன் நாம் காதல் கொள்ள வேறென்ன வேண்டும் கூறுங்கள்? நீங்கள் முன்னமே இம்மூலிகையை வளர்த்திருந்தால் நாங்கள் என்ன கூற போகிறோம் என இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை ஆர்வம் இருந்தால் போதும் இந்த பதிவிலிருக்கும் […]

எப்படி பராமரிப்பது?

கேரட் வளர்ப்பு

Posted on

வணக்கம்! குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட்? கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம்? மஞ்சள் முள்ளங்கிகள் குளிர் காலத்தில் நன்றாக வளரும். வசந்தத்தில் இரு வாரங்கள் இடைவேளையில் (பயிர் செய்து கொண்டே இருக்கலாம். கோடையில் […]