செடி வளர்க்கும் கோப்பைகள்

Spread the Green love!

 

வீட்டில் பழைய தேநீர் கோப்பைகள் வைத்துள்ளீர்களா? வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம்! தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா? சுவாரஸ்யமாக அவற்றினை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம்.

இந்த அழகான படைப்புகளை பாருங்கள்…

இச்சிறு நண்பர்கள் நமது தோட்டங்களை அலங்கரிப்பது மட்டுமல்லாமல் அழகான பரிசுகளாய் நமது பணத்தையும் சேமிக்கின்றன.

இவற்றுள் சிறு செடிகள் மட்டுமே வளர்க்க முடியும்.

இதற்கு தேவையன சில பொருள்களை பார்ப்போம்

  • தேநீர் கோப்பைகள்
  • நீர் வடிவதற்காக கூழாங்கற்கள்
  • தொட்டி மண்
  •  உலர் பாசி·
  • மலர்கள் அல்லது சிறிய தாவரங்கள்·
  • சிறு சதைப்பற்றுள்ள தாவரங்கள்·
  • மலர் கம்பிகள்·
  • பல்குத்திகள்

சரி இவற்றை செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம் வாருங்கள்.

முதலாவது :

பழைய உபயோகமற்ற தேநீர் கோப்பைகளை அவற்றின்  வட்டுகளுடன்(saucers)ea84d6aba98cb66684779977e1eeab03

எடுத்துக்கொள்ளுங்கள். கோப்பையின் அடிபாகத்தில் தண்ணீர் வடிவதற்காக சிறு துளையிட்டு கொள்ளவும். தண்ணீரை பிடித்து வைக்க வட்டுகள் பயன்படும்.

இரண்டாவது:

கோப்பைகளின் அடிபாகத்தில் சிறு கூழாங்கற்கள் போடவும். அவை அதிகபடியான நீரை அகற்ற உதவுகிறது.

மூன்றாவது:

இப்போது தோட்ட மண்ணை அதில் இடவும். பிறகு தேர்ந்தெடுத்த செடியை அதினுள் வைக்கவும்.

வளர்க்கும் செடிகளை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக சீக்கிரமாக வளரும் தாவர வகைகளை  தேர்ந்தெடுக்க கூடாது. கோப்பைகளின் அளவு சிறியதாய் இருப்பதால் சீக்கிரமாய் வளரும் செடிகள் நமது திட்டத்தை கெடுத்துவிடும்.


  • சதைப்பற்றான தாவரங்கள்:

சதைப்பற்றான தாவரங்களே மிகவும் பொருத்தமானவை. இவை உள்ளூர் நாற்றங்காலில்(nurseries) கிடைக்கும். மற்றும் சில சிறு கொடிகள், வைலட் ஸ்பிரிங்(violets spring), ஃபீகஸ்(ficus) போன்ற தாவரங்களையும் பயன்படுத்தலாம். சிறு செடிகளை வேரில் சிறிது மண்ணுடன் கோப்பைகளுக்கு மாற்ற வேண்டும்.teacup_cactus


  • மூலிகைகள்:

சமையலறை தோட்டத்திற்கு சில கோப்பைகளை பயன்படுத்தலாமா? ஆரிகானோ(oregano), புதினா, கெமோமில்(chamomile)  மற்றும் சில செடிகளை வளர்க்கலாம். ஆனால் ஒரே கோப்பையில் நிறைய செடிகளை நட கூடாது ஏனெனில் அவற்றின் வேர்கள் வளர இடம் இருக்காது.herb-planters

 


  • பூச்செடிகள்:

பட் ரோஸ், மற்றும் பல அலங்கார பூச்செடிகளையும் இக்கோப்பைகளில் வளர்க்கலாம்.7-easy-ways-to-repurpose-teacups-1-size-3

 


இந்த மாதிரி கோப்பைகள் நமது இல்லத்திற்கு ஒரு புது பொலிவை தரும். எனவே உங்கள் நேரத்தில் சிறிது இதற்காக செலவழித்து சில மாதங்களுக்கு பயனடையுங்கள்.


     இதே போல சில பரிசுகள் செய்தால் என்ன?



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறோம். பிடித்திருந்தால் விரும்புங்கள்(like), பகிருங்கள்(share), கருத்துக்களை(comment) பதிவு செய்யுங்கள்.

Click here to read this post in English.

3 thoughts on “செடி வளர்க்கும் கோப்பைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது