வேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்! – தேனீ ஆர்க்கிட்கள்

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10

#தேனீ_ஆர்க்கிட்கள்

#வேஷதாரி_செடிகள்

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’!.

தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இவற்றின் பெயருக்கேற்ப இத்தாவரத்தின் பூக்களை பார்க்கும்போது ஒரு பெண் தேனீயோ அல்லது பெண் குளவியோ இந்த பூக்களின் மேல் அமர்ந்திருப்பதுபோல் தெரியும்.

இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமூட்ட வெறும் வடிவமட்டுமல்லாமல் இவை பெண் தேனீ போல் வசீகரிக்கும் ஒரு வகை ரசாயன வாசனையை வெளியிடுகிறது. இந்த வித்தைக்கார பூக்கள் ஏன் இப்படி காட்சியளிக்கிறது என இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே? நீங்கள் நினைப்பது சரி தான் இவை இனசேர்க்கைக்கு தயாராக இருக்கும் ஆண் தேனீக்களை ஈர்க்க தான் இவ்வளவும்.

இப்படி தேனீக்களை ஏமாற்றுவதன்மூலம் இவற்றுக்கு என்ன லாபம் இருக்கிறது என யோசிக்கிறீர்களா? எல்லாம் சுயநலம் தான்! இவ்வாறு ஆண் தேனீக்களை கவருவதன்மூலம் தன் இனம் அழியாமல் பாதுகாக்கிறது. உற்சாகமாக கிளம்பி வரும் ஆண் தேனீ ஒன்று ஒரு பூவிலிருந்து மகரந்த துகள்களை தன் மீது படிந்துகொள்கிறது. பிறகு ஏமாற்றத்துடன் அடுத்த பெண் தேனீயை பார்த்து திரும்ப உற்சாகத்துடன் அந்த மலரிடம் சென்று தன் மீது படிந்த மகரந்தத்தை அங்கே பரப்பி விட்டு அடுத்த பூவிற்கு செல்கிறது. ஆனால் ஆச்சர்யமாக இந்த தேனீ ஆர்க்கிட் இனங்களுள் பல சுயமாகவே மரகந்த சேர்க்கை செய்து கொள்கின்றன.

இருந்தும் தப்பி தவறி கூட தன் சந்ததி தொடர வேண்டும் என்பதில் இவை உறுதியாய் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. மத்திய தரைக்கடல் பகுதிகளில் பரவலாக காணப்படும் இவை இயற்கையின் குட்டி மாஸ்டர் மைன்டுகள் என்றே சொல்லலாம்.இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மேலும் பல விசித்திரமான செடிகளை பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது