வீட்டில் வளர்க்க கூடிய மந்திர செடிகள்

Spread the Green love!

சில மாதங்களுக்கு முன் இணையம் முழுதுமே ஒரே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது என்ன என்று பார்த்தால் ஹாரி பாட்டர் கதை வந்து 20 வருடங்கள் ஆனதாம். ஹாரி பாட்டர் என்றால் என்ன என்று புரியாத நண்பர்களுக்கு- இது ஒரு ஹை டெக் ஹாலிவுட் ஜீபூம்பா (HIGH TECH HOLLYWOOD JEEBOOMBAA)படம். இதைப் பார்த்ததும் நாம் ஏன் நமது வீட்டில் கொஞ்சம் மந்திரம் மாயம் கொண்டு வரகூடாது? என தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு! ஆமாம்ங்க நம்ம வீட்டிலேயே  நம்ம சில மந்திர செடிகளை வளர்க்க முடியும். இந்த படத்தில் வரும்  வுல்ஃப்ஸ் பேன், டெவில் ஸ்னேர், கில்லிவீட் , மாண்டிரேக் போன்ற கற்பனை செடிகளை அல்ல சில நிஜ வாழ்க்கை மாய செடிகளை பற்றி பார்ப்போம்.

#1.செம்பருத்தி

பொதுவாக சிவப்பு நிறத்தில் காணப்படும் இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட  வகைகள் உள்ளன. இவை வெப்பத்தை தாக்குபிடிக்கக்கூடியவை. இவற்றை தொட்டிகளிலும் வளர்க்கலாம். இச்செடியின் பூவும் இலையும்

 • மந்த வயிறு
 • உயர் இர்த்த அழுத்தம்
 • பாக்டீரியாக்களின் தொற்று
 • ஜுரம்

ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.

பண்டைய எகிப்தில் இச்செடியினை

 • உடல் வெப்பத்தை குறைக்கவும்
 • இருதயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும்
 • நிறைய சிறுநீர் சுரப்பதற்கும் பயன்படுத்தியுள்ளனர்

ஆஃப்ரிக்காவில் இதனை

 • மலச்சிக்கல்
 • புற்றுநோய்
 • கல்லீரல் நோய்களுக்கும்
 • சளிக்கும்

மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் இதன் இலைகளின் கூழை புண் மற்றும் காயங்களை ஆற்றுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். இப்போது இதனை இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைப்பதற்கும், முடி வளரவும் உபயோகிக்கின்றனர்.

#2.கற்பூரவள்ளி

கற்பூரவள்ளியை பார்க்காதவர் தமிழ் நாட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இவை எளிதாகவும் சீக்கிரமாகவும் வளர கூடிய புதர் வகையை சார்ந்தவை. இவற்றால் கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முடியும். இவை அலங்கார செடிகளாகவும் வளர்க்கபடுகின்றது. இவை

 • ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் கீல்வாதத்தினின்று நிவாரணம் தரவும்
 • குடல் எரிச்சலில் நிவாரணம் தரவும்
 • மார்பக புற்று நோயின் சிகிச்சைக்காகவும்
 • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்
 • மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் தரவும்
 • வியர்வை சுரப்பை அதிகரிக்கவும், ஜுரத்தை குறைக்கவும்
 • கண்களில் அழுத்தத்தை குறைக்கவும்
 • சொரியாசிஸை குணப்படுத்தவும்
 • பூசிகடிகளுக்கு மருந்தாகவும்
 • சளிக்கு நிவாரணமாகவும்

பயன்படுத்தப்படுகின்றன.

#3.சோற்று கற்றாழை

சோற்றுக்கற்றாழை தன் மருத்துவ குணநலன்களுக்காக மிகவும் பேசப்படும் வெப்பமண்டல செடிகளுள் ஒன்று. உங்களுக்கு தெரியும பண்டைய எகிப்தில் இதனை அமரத்துவத்தின் செடி அதாவது அழியாமையின் செடி என அழைப்பராம். இதற்கு எடுத்துக்காட்டாக  அழகுக்கு பேர்போன ராணி கிலியோபட்ரா கற்றாழை குளியல் எடுப்பாராம் இதுவே அவர் அழகிற்கு மிக பெரிய பங்கு வகித்திருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். இது

 • மலச்சிக்கல்
 • பெருங்குடல் வலி
 • கிறுமி தொற்றுகள், தாக்குதல்
 • பூஞ்சை தொற்றுகள்
 • வெங்குரு மற்றும் தீக்காயங்கள்
 • சொரியாசிஸ்
 • குளிர் புண்கள்
 • கீல்வாதம்
 • குடல் நோய்கள்
 • ஜுரம்
 • நமைச்சல்
 • அழற்சி, வீக்கம்
 • காயங்கள்
 • ஹெர்பெஸ்
 • தோல் எரிச்சல்
 • தோலுறைவு
 • உலர்ந்த முடி மற்றும் தலை
 • செரிமாணம்
 • அமிலம் கார சமநிலை
 • நுரைமம் வளர்ச்சி
 • செரிமான பாக்டீரியாக்கள் அதிகரிக்க
 • குடலின் ஒழுங்கான செயலாக்கத்துக்காக
 • வயிற்று புண்
 • துத்தநாகம் குறைபாடு()
 • விட்டமின் A குறைபாடு
 • விட்டமின் C குறைபாடு
 • விட்டமின் E குறைபாடு
 • முகப்பறு
 • தோல் வியாதிகள்
 • செல்கள் வயதாவதை தடுப்பது
 • சர்க்கரை நோய்

ஆகிய இவை அனைத்திற்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

#4.மல்லிகை

200கும் மேற்பட்ட வகைளுடன் நாம் பார்க்க இருக்கும் அடுத்த மாய செடி மல்லி. மல்லிக்கு பெர்சிய மொழியில்  நறுமணமிகுந்த மலர் என பொருள்படும் ‘ஜாஸ்மின்’ என்னும் வார்த்தையால் அழைக்கப்படுகிறது. இதற்கு நிறைய வரலாறுகளும் உண்டு. இதன் அழகையும் நறுமணத்தையும் தவிர இதனை

 • நறுமண சிகிச்சை
 • மனதிற்கு அமைதியளிக்கவும், தளர்வு அளிக்கவும்
 • மன அழுத்தத்திலிருந்து விடுப்பு தரவும்
 • தலைவலியை போக்கவும்
 • வெங்குரு மற்றும் வெப்பத்தாக்குதலை குணப்படுத்தவும்
 • வலியை போக்கவும்
 • பதட்ட்த்தை கட்டுப்படுத்தவும்
 • உரசல்களையும் வெட்டுகளையும் கழுவவும்

பயன்படுத்துகின்றனர்.இதனை தேநீர்வடிவிலோ களிம்பாகவோ பயன்படுத்துகின்றனர். இவையல்லாமல் இதன் மலர்கள் அவற்றை சுற்றியுள்ள இடத்தை ஒளிமயமாக்குகின்றன.

மல்லிகை வளர்ப்பை பற்றி அறிய இங்கே அழுத்தவும்.

#5.நித்திய கல்யாணி

இவை சிறிய புதர் வகையை சார்ந்தவை. இவற்றில் ஆழ்ந்த இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை பூக்கள் மலர்கின்றன. இவை உலகில் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகின்றன. இந்த சிறு செடிகளில் நிறைய மாய சக்தி உள்ளது. இவை பாரம்பரியமாக

 • சர்க்கரை நோயை குணப்படுத்துவதற்கும்
 • வெட்டுகள், காயங்கள் மற்றும் குளவி கடிக்கு மருந்தாகவும்
 • இரத்தப்போக்கை குறைக்கவும்
 • செல்கள் வயதாகும் வேகத்தைக் குறைக்கவும்

பயன்படுகின்றன.

 

தற்போது இவை குழந்தைகளில் புற்று நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது

 

இதுமட்டுமல்லாமல் இவை

 • உடலில் நீர் வீக்கத்தை குறைக்கவும்
 • நச்சு பண்புகளை நீக்கவும்
 • வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும்
 • தொண்டை பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

 

இந்த செடிகளெல்லாம் அழகும் வசீகரமும் மட்டுமல்லாமல் தங்களிடையே நிஜ மாய சக்தியை கொண்டுள்ள மாயசெடிகள் தான். இவை நம்மை சுற்றி ஒரு நேர்மறையான சக்தியை ஏற்படுத்துகின்றன. இவை அல்லாமல் இன்னும் அநேகமாய செடிகளுண்டு ஆனாலும் இந்த ஐந்தும் நம் அனைவர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செடிகளென்றே சொல்லலாம். சரி வாருங்கள் நாம் இவற்றை நடவு செய்து அவற்றின் மாயத்தை அனுபவிப்போம். உங்களை மீண்டும் எங்க்ள் அடுத்த பதிவில் சந்திக்கிறோம். உங்களூக்கு ஏதேனும் கேள்விகள் இருப்பின் அவற்றை எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

 

உங்களிடம் உள்ள மாய செடிகளை பற்றி எங்களுடன் பகிருங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பயிரிட்டு மகிழுங்கள் நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது