செடிகள்நீர் தாவரங்கள்புதியதோர் தாவரம் அறிவொம் தொடர்பூந்தோட்டம்

விக்டோரியா அமேசோனிகா – பூதாகரமான அல்லி

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_06

#விக்டோரியா_அமேசோனிகா

#பூதாகரமான_அல்லி

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘விக்டோரியா அமேசோனிகா’!

இங்கிலாந்திலுள்ள விக்டோரியன் செடிகள் அருங்காட்சியகமான கியூ கார்டனில் இந்த வகை நீர் அல்லிகளின் வகைகள் நிறைய உள்ளது. இவ்வகை அல்லிகளின் இலைகள் 3 மீட்டர் வரை விட்ட அளவு கொண்டதாய் வளர்கின்றன. இவை ஒன்றின் மேல் ஒன்று வளராதபடி இவற்றின் ஓரங்கள் மேலாக வளைந்து காணப்படுகின்றன. இவற்றின் அடிபுறத்திலோ இவற்றை பாதுகாக்க முட்களாய் நிறைந்திருக்கும்.
ஒரு வளர்ந்த இலையானது சமமாக பரப்பப்பட்ட 45 கிலோ எடை வரை தாங்க கூடியது, அல்லது ஒரு குழந்தையை தாங்க கூடிய அளவுக்கு வலிமை உடையது.

இவற்றின் மலர்கள் பெரிதாகவும் அழகாகவும் இருக்கும். முதல் இரவில் அவை வெண்மையாகவும் பெண் பூக்களாகவும் இருக்கும் அப்போது நல்ல மணம் வீசி வண்டுகளை ஈர்த்து சிறை பிடித்துக்கொள்கின்றன. இரண்டாம் இரவிலோ இவை இளஞ்சிவப்பு நிறமாகவும் மணம் இழந்தும் காணப்பட்டு ஆண் பூக்களாய் வண்டுகளை விடுவிக்கின்றன. இந்த வண்டுகள் தன் மீது ஆண் பூக்கள் படிவித்த மகரந்தத்தை புதிதாக பூத்திருக்கும் பெண் பூக்களிடம் கொண்டு செல்கின்றன. இது ஒரு சுழற்சியாக நடைபெறுகிறது. விடியலில் இந்த மலர்களை காண நேரிட்டால் இவை சட்டென மூடிக்கொள்வதை பார்க்க முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...