தீபாவளி நெருங்கி கொண்டே வருகிறது. இப்போதே அதற்கான பலகாரங்கள் மற்றும் உணவுகளுக்கான ரெசிபிக்களை கூகுளில் தேட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன் இந்த பண்டிகை தினத்தை சற்று ஆரோக்கியமானதாக கொண்டாட கூடாது? முடக்கத்தானுடன்? வாருங்கள் இந்த பதிவில் முடக்கத்தானின் குணநலன்கள் மற்றும் அதன் வளர்ப்பினை குறித்து பார்ப்போம்.
இந்திரவல்லி என்ற மறுபேர் கொண்ட முடக்கத்தான் தமிழ்நாட்டில் மிகவுமே பிரபலமான ஒரு கீரை வகை. முன்பெல்லாம் அனைவர் வீட்டின் தோட்டத்திலும் ஒரு களை போல் வளர்ந்திருந்த இது இன்றும் கிராமபுறங்களில் உள்ள வீடுகளில் காணப்படுகின்றது. இதன் அசல் பெயர் முடக்கு+அற்றான் அல்லது முடக்கு+ஆறுத்தான். இதிலிருந்தே இதன் பயன்களை கணிக்க தொடங்கியிருப்பீர்கள். ஆம், இது முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலிகளை குணப்படுத்த பயன்படுகிறது.
இதன் அறிவியல் பெயர்- கார்டியோஸ்பெர்மம் ஹாலிக்காகபூம் (Cardiospermum Halicacabum). இதனை கன்ஃபடா (Kanphata)என ஹிந்தியிலும், புட்ட காக்ரா (Budda Kakara)என தெலுங்கிலும், அக்னிபல்லி(Agniballi) என கன்னடத்திலும், ஜ்யோடிஷ்மடி(Jyotishmati) என மலையாளத்திலும் அழைக்கின்றனர். எப்படி கண்டறிவது? இந்த கீரையை பலூன் போன்ற அதன் காய்களை கொண்டு கண்டுபிடிக்கலாம்(இதனால் இதனை பலூன் கொடி என்றும் அழைப்பர்). இது கொடி வகையை சேர்ந்தது. இது தெரு ஓரங்களிலும், காலி இடங்களிலும் பெரிதும் காணப்படும்.
எப்படி கண்டறிவது?
இந்த கீரையை பலூன் போன்ற அதன் காய்களை கொண்டு கண்டுபிடிக்கலாம்(இதனால் இதனை பலூன் கொடி என்றும் அழைப்பர்). இது கொடி வகையை சேர்ந்தது. இது தெரு ஓரங்களிலும், காலி இடங்களிலும் பெரிதும் காணப்படும்.
முடக்கத்தானின் மருத்துவ குணநலன்கள்:
1.அல்சர் குணப்படுத்தும் தன்மை:
அல்சர் குணப்படுத்தும் இந்த தன்மை முடக்கத்தானின் மருத்துவ குணங்களில் ஒன்று. இதன் கீரையினை வேகவைத்து அதில் கிடைக்கும் சாற்றினை இதற்கு பயன்படுத்தலாம். அமிலதன்மையினால்(ஆசிடிடி) அவஸ்தைபடுபவர்கள் இக்கீரையினை உணவுமுரையில் சேர்த்துக்கோள்வது நல்லது. இதனை சூப் வைத்து குடிப்பது நல்லது.
2.வயிற்று போக்கை குணப்படுத்தும் தன்மை:
இதன் கொதிக்கவைக்கப்பட்ட சாறு இந்தியா முழுதும் அநேக இடங்களில் வயிற்றுபோக்கை குணப்படுத்த பயன்படுத்துகிறது. இதற்கு காரணம் இதில் இருக்கும் டான்னிஸ்(tannins), ப்லாவனாய்ட்ஸ்(flavonoids), அல்கலாட்ஸ்(alkaloids), ஸ்டெரோல்ஸ்(sterols), டிரைடெர்பென்ஸ்(triterpenes), சாபொனின்ஸ்(saponins) தான் என ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளனர்.
3.கருவுறுத்தலை அதிகரிக்கும் தன்மை:
விந்துக்களின் அளவையும்(எண்ணிக்கை) அதன் இயக்கத்தையும் அதிகரிப்பது இதற்கு இருக்கும் மற்றுமொரு சுவாரஸ்யமான குணநலன். இந்த கீரையை 30 நாட்கள் தொடர்ந்து உண்டு வந்தால் விந்துக்களின் அளவு(எண்ணிக்கை) அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் டெஸ்டோஸ்டெரான்(testosterone) சுரப்பும் அதிகரிக்கும்.
4.முடக்கு வாதத்தை எதிர்க்கும் தன்மை:
இதன் பெயருக்கு ஏற்ப இது பாரம்பரியமாக முடக்கு வாதத்தை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆராய்ச்சிகளும் கைகொடுக்கின்றன. பொதுவாக இதனை தோசை மற்றும் ரசத்தில் கலந்து கொடுப்பதின் மூலம் மூட்டில் உள்ள வீக்கமும் வலியும் குறைகிறது.
5.ஆக்சிஜெனேற்றத்தடுப்பான்(ஆன்டி ஆக்ஸிடண்டு) மற்றும் வீக்கம் குறைக்கும் தன்மை:
முடக்கத்தான் கீரைக்கு ஆக்சிஜெனேற்றத்தடுப்பான்(ஆன்டி ஆக்ஸிடண்டு) மற்றும் வீக்கம் குறைக்கும் தன்மைகள் உள்ளது. இதிலுள்ள ப்லாவனாய்ட்ஸ்(flavonoids), க்லைகோசைட்ஸ்(glycosides), ஃபீனல்(phenols) ஆகியவையே இதன் ஆன்டி ஆக்ஸிடண்டு மற்றும் விக்கம் குறைக்கும் தன்மைக்கு காரணம். இதுமட்டுமல்லாமல் இதில் வலி குறைக்கும் குணநலன்களும் உள்ளது இதனால் இதனை வீக்கம் குறையவும் வலி குறையவும் பயன் படுத்தலாம்.
6.பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை:
இச்செடியின் அனைத்து பாகங்களுக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உள்ளது. ஐந்து வகையான பாக்டீரியாக்களுக்கு(Salmonella, Staphylococcus Aureus, Aeromonas, E.coli and Pseudomonas) இதனை பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அனைத்திலும் ஆச்சரியமானது இதன் விதையின் தோலில் தான் இந்த தன்மை அதிகமாக உள்ளது தான்.
7.கொசுக்களை விரட்டும் தன்மை:
முடக்கத்தானின் மற்றுமொரு ஆர்வமிக்க குணநலன் இதனை தோலின் மேல் தடவுவதன் மூலம் இது கொசுக்களை விரட்டுகிறது. இதனை ஆராய இதில் எத்தனால் சாற்றை பயன்படுத்தி பார்க்க அது ஐந்து வகையான கொசுக்களுக்கு(Culex Quinquefasciatus, Aedes Aegypti and Anopheles Stephensi) எதிராக இது பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது
8.பூஞ்சைகளை எதிர்க்கும் தன்மை:
முடக்கத்தானுக்குபூஞ்சை தொற்றுகளை எதிர்க்கும் தன்மையும் உள்ளது. இதற்கு காரணம் இதிலுள்ள வேதி பொருட்களான லூடியோலின்(luteolin) மற்றும் ருடின்(rutin) தான் என கண்டறியப்பட்டுள்ளது. இதனை பற்றிய ஆராய்ச்சியை இங்கே படிக்கலாம்.
9.வலிப்பை எதிர்க்கும் தன்மை:
முடக்கத்தான் கீரையின் சாற்றை மின்சாரம் செலுத்தப்பட்ட ஒரு எலியிடம் செலுத்தி பார்க்க அது அந்த எலியின் வலிப்பை குறைத்துள்ளது. இதிலிருந்து இதற்கு வலிப்பை தடுக்கும் தன்மை இருப்பதும் நிரூபணம் செய்யப்பட்டது.
10.ஜுரம் குறைக்கும் தன்மை:
இதன் ஜுரம் குறைக்கும் தன்மையினால் இது மலேரியா ஜுரத்திற்கு ஏற்ற மருந்தாக இருக்கிறது. இதுமட்டுமல்லாது, ஜுரம், சளி ஆகியவற்றால் அவதி பட்டால் முடக்கத்தான் சூப் வைத்து குடித்தால் இரண்டும் குறைவது காணலாம்.
இதுமட்டுமல்லாது இதனை
- இருமல்
- மூலம்
- காதில் நீர் வடிதல்
- தலைவலி
- கட்டிகள்
- மேக வெட்டை நோய்(Gonorrhea)
ஆகிய வற்றினை குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
இதில் இவ்வளவு குணநலன்கள் இருந்தும் இவற்றை நாம் சிகிசைக்கு பெரிதும் பயன்படுத்துவது கிடையாது. இதற்கு காரணம் நாம் கிராமத்தில் வாழ்ந்தால் ஒழிய நமக்கு இவை (மூலிகைகள்) பது மலர்ச்சியாக(fresh) தினமும் கிடைப்பது இல்லை. நமக்கு இருக்கும் பரபரப்பான வாழ்கையில் தினமும் மார்க்கெட்டிற்கு சென்று பது மலர்ச்சியான கீரையை வாங்குவது என்பது முடியாத செயல்.
விசேஷமாக மற்ற மூலிகைகள் போல் அல்லாமல் நல்ல பலன்கள் அடைய முடக்கத்தானை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரே வழி நாமே இதை வளர்ப்பது தான். மூலிகை செடிகளை வளர்ப்பது உண்மையில் அலங்கார செடிகளை வளர்ப்பதை விட எளிமையானது. இவற்றிக்கு பொதுவாக பெரிய பராமரிப்பு தேவைப்படுவது இல்லை. சரி வாருங்கள் இதனை எப்படி வளர்ப்பது என பார்ப்போம்.
முடக்கத்தானை வீட்டில் வளர்ப்பது எப்படி?
அவ்வளவு தான் உங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு வழியை உங்களுக்கு தெரிவித்து விட்டோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். நீங்கள் அறிய விரும்பும் அடுத்த மூலிகை செடியினை கமென்டின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள். அடுத்தபதிவில் உங்களை சந்திக்கிறோம், அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்!
To read this in English click here.
3 thoughts on “முடக்கத்தான் வளர்ப்பதில் உள்ள 16 பயன்கள்”
Sugar patient முடக்கத்தான் sapitalaama
சாப்பிடலாம் ஐய்யா அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை