மரம் நடுவதற்கான சரியான வழி முறை

Spread the Green love!

மரம் நடுவதற்கான சரியான முறைகளை அறிந்தால், மிக குறைந்த நேரத்தில் அதை செய்து விடலாம். அகலமான் குழி தோண்டுவதன் மூலம் மரம் வேகமாக வளரும். மரத்தின் வேரை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அகலமான குழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைகள் கூறுகின்றன.

மண் அடைப்பை தவிர்க்க குழின் ஆழம் வேரின் நீளத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

எங்களது படிப் படியான வழிகாட்டுதல் மற்றும் குறிப்புகளை கீழே காணலாம்.

மரம் நடுதல்010

முதலில் மரத்தின் வேரை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அகலமான குழியினை தோண்ட வேண்டும். வேருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாரு அதை குழியில் நட வேண்டும்.

இதன் பிறகு மர்த்தை சரியான திசையில் திருப்பி வைக்க வேண்டும். வேரினை சுற்றி துனியோ காகிதமோ இருந்தால் அதை கவனமாக அகற்றவும்.


குழியை மீண்டும் நிரப்புதல்FH10SEP_PLTSUR_06

வேரினை சுற்றி மண்ணை மீண்டும் நன்றாக நிரப்ப வேண்டும், மேலும் மரத்தின் தண்டு நேராக இருக்கிறதா என்று அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். மீதம் உள்ள மண்ணின் மூலம் கரைவிளும்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மண்ணை கரிம பொருள்களை கொண்டு திருத்துதல் மூலம் மிகக் குறைந்த நன்மைகளே கிடைக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன (அங்குள்ள மண் வளம்மிக்கதாய் இருக்கும் வரை), இதனால் தற்போது வல்லுனர்கள் இதை பரிந்துரைப்பதில்லை. புதிய வேர்கள் வளர போதுமான இடைவெளி இருந்தாலே மரம் நன்றாக வளரும். இதற்காகவே குழிகள் அகலமாக இருப்பது மிக முக்கியம்.


மரத்திற்கு ஆதரம் தருதல்041084043-02_xlg

மரத்திற்கு ஆதாரம் அளிப்பதற்கு ஒரு முனை கூற்மையாக இருக்கும் கம்பினை கவனமாக குழியில் நட வேண்டும். இதை தண்டு பகுதியுடன் லேசாக கட்ட வேண்டும்.

பெரிய மரங்களுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட கம்புகள் தேவைப் படலாம்.

 


மரத்திற்கு தண்ணீர் ஊற்றுதல்watering-trees

மரங்களை நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும் மேலும் பல வாரங்களுக்கு தொடர்ந்து தினமும் ஊற்ற வேண்டும். இந்த நேரத்திற்குள் வேர்கள் நன்றாக படரத்தொடங்கி விடும், இதன் பிறகு தண்ணீர் ஊற்றும் அளவினை குறைத்துக் கொள்ளலாம்.

மரங்களை நடும் போது உரம் பயன்படுத்துவது குறைந்த நன்மைகளையே தரும், சில நேரங்களில் இது ஆபத்தாகவும் இருக்கலாம். எனவே மரம் நட்டு ஒரு வருடத்திற்கு பிறகே உரங்களை பயன்படுத்த வேண்டும்.

மரத்தின் தண்டுப் பகுதியை சுற்றி 3 அங்குலத்திற்கு தழைக்கூளம் அமைப்பது களைகளையும் நீர் வீணாவதையும் தடுக்கும்.

குறிப்பு: புதிதாக நட்ட மரத்திலிருந்து உடைந்த, நோயுற்ற கிளைகளை மட்டும் நீக்க வேண்டும். இல்லையேல் முதல் வளரும் பருவம் முடியும் வரை காத்திருப்பது நல்லது.

3 thoughts on “மரம் நடுவதற்கான சரியான வழி முறை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது