பேஸ்பால்(தயூளக்கட்டு பந்து) செடி

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_04

#பப்ளிமாஸ்_செடி

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘பேஸ்பால் செடி’!

பேஸ்பால் செடி என செல்லமாய் அழைக்கப்படும் யுஃபோர்பியா ஒபிசா, தென் ஆப்ரிக்காவிலுள்ள காரூ பகுதியில் அதிகமாக காணப்படுகின்றது. உலகம் முழுவதும் இந்த செடியை செடி ஆர்வலர்கள் இதன் வடிவத்திற்காக இதனை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் இதன் இயற்கை வாழ்விடத்தில் இதன் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இதன் தொகையை பாதுகாக்க சட்டங்கள் ஏற்கப்பட்டுள்ளது. தன்னுடைய வாழ்விடத்தில் இதன் தொகையை குறைந்திருந்தாலும் விற்பனையாளர்கள் இதனை பயிரிடுவதால் புழக்கத்தில் இதன் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இவ்வாறு இதனை பயிரிடுவதன் மூலம் நாற்றுப்பண்ணைகளும் செடி ஆர்வலர்களும் இதன் தொகை இதனுடைய இயற்கை வாழ்விடத்தில் குறையாமல் பாதுகாக்கின்றனர். இந்த அழகு பப்லிமாஸ் செடி நம் தோட்டங்களில் இருக்க வேண்டிய ஒன்று தான்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது