புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

Spread the Green love!

புவி தினம் கடந்த 1970ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய நிகழ்வாக 192 நாடுகளுக்கு மேல் எற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. புவிக்காக ஒரு சிறப்பு தினத்தை அற்பனிப்பது நாம் நமது உலகத்தின் எதிர் காலத்தின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என நிரூபிக்கிறது. நீங்கள் அனைவரும் எதேனும் ஒரு வழியில் புவி தினத்தில் பங்கு பெறலாம். மரக் கன்று நடுதல், அக்கம் பக்கத்தில் விளைந்த காய் கறிகளை கொண்டு சமையல் செய்தல், சுற்றத்தினரை தெளிவு படுத்துதல், சுற்றுப்புரத்தில் இருக்கும் குப்பைகளை சுத்தப்படுத்துதல், பறவைகளுக்கு உணவளித்தல் அல்லது மின்சாரத்தை மிச்சப்படுத்துதல் என நீங்கள் செய்யக் கூடியவை ஏராளம். நாம் நமது பூமிக்காக செய்வதற்கு புவி தினம் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்பதை நினைவினில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் இந்த புவி தினத்திலிருந்து  செய்யக் கூடிய சில எளிய செயல்கள்:

  • உங்களுக்கான சிறிய தோட்டம் அல்லது பன்னையை உருவக்குங்கள்
  • உங்களுக்கான சிறிய காட்டினை உருவக்குங்கள்
  • உங்களது அடுத்த தலைமுறையை தயார் படுத்துங்கள்

சிறிய தோட்டம் அல்லது பன்னையை உருவக்குதல்

உங்கள் உணவை நீங்களே பயிரிடலாம். இது மிகவும் சுலபமான மற்றும் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. இதற்காக நீங்கள் உங்கள் நேரத்தையும் இடத்தையும் மட்டும் சரியாக செலவிட வேண்டும்! எங்கள் வலைப்பதிவை தொடர்ந்து பின்பற்றினால் இதற்கான வழி முறைகள் மற்றும் குறிப்புகளை பெறலாம்!2

இதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கு இரசாயனங்கள் கலப்பில்லாத தூய்மையான உணவு கிடைகிறது என உறுதி செய்து கொள்ளலாம். அதோடு நீங்கள் மண் புழுக்களுக்கும் மறைமுகமாக உதவி செய்யலாம்! அதிகப்படியான விளைச்சலினால் எற்படும் மண் சிதைவையும் நீங்கள் தடுக்கலாம்.


சிறிய காட்டினை உருவக்குதல்

இதை பார்த்து குழப்பம் அடைய வேண்டாம்! இது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிய விஷயம் கிடையாது. உங்களால் முடிந்த அளவு அதிகப் படியான மரங்களை நண்டுங்கள். மரங்களால் இயற்கைக்கு நாம் நினைப்பதை விட நம்மால் முடிந்ததை விட அதிக பலங்கள் அளிக்க முடியும். மரம் வளர்ப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.z4VxWgI


அடுத்த தலைமுறையை தயார் படுத்துதல்

இதை எதிர்காலத்திற்கான சிறந்த திறவு கோள்! அல்லது பழமையின் சீரமைப்பு! என்றும் கூறலாம். நமது பிள்ளைகளுக்கு (நம் அடுத்த தலைமுறைக்கு) பூமியை காப்பதற்கான முக்கியத்துவத்தை பற்றி கற்பிப்பது மிகவும் முக்கியம். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பினைப்பினைப் பற்றி அவர்களுக்கு உண்ர்த்துவது நம் தலையாய கடமை.FreeGreatPicture.com-32429-father-and-son-are-doing-gardening

இந்த நாளின் மூலம் இயற்கையுடன் நமக்கிருக்கும் இனைப்பிற்கு ஒரு புது வடிவம் கொடுப்போம்

அனைவருக்கும் இனிய புவி தின வாழ்த்துக்கள்!!

2 thoughts on “புவி தினம் (2017) – செய்ய வேண்டியனவற்றின் பட்டியல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது