புதினா வளர்த்தல்(பகுதி-1)

Spread the Green love!

தாவரவியல் பெயர்: மெந்தா அர்வென்ஸிஸ் (Mentha arvensis)

இவை நறுமணம் நிறைந்தவை, சீக்கிரம் வளர கூடியவை, பசுமை மிக்கவை அது மட்டுமல்லாமல்  பழங்களோடும் காய்கறிகளோடும் இறைச்சியோடும் நன்கு கலக்க கூடியவை. தனக்கென தனி பனிக்கூழ்(ice cream) சுவையும்(flavor) கொண்டவை. இச்செடியுடன் நாம் காதல் கொள்ள வேறென்ன வேண்டும் கூறுங்கள்? நீங்கள் முன்னமே இம்மூலிகையை வளர்த்திருந்தால் நாங்கள் என்ன கூற போகிறோம் என இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும். இல்லை என்றாலும் பரவாயில்லை ஆர்வம் இருந்தால் போதும் இந்த பதிவிலிருக்கும் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவையிலிருந்து உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களுக்கு கிடைத்து விடும்.

201901-850x567-mint

உங்கள் மூலிகை தோட்டத்தை ஆரம்பிக்க புதினா ஒரு அருமையான துவக்கம். இவற்றை வளர்ப்பதும் எளிது,இவற்றை கொண்டு சமைப்பதும் வேடிக்கையானது தான். அது சிற்றுண்டியானாலும், சரி மதிய உணவானாலும், சரி இரவு உணவானாலும் சரி. அதுமட்டுமல்ல கோடை காலங்களில் குளிர்ந்த தேநீரில் (iced tea) சிறிது புதினாவை சேர்த்து அருந்தும் சுகத்தையும் நாம் மறக்க கூடாது.

cc_coney-island-iced-tea_s4x3

புதினா எளிதாக வளர கூடியவையானாலும், ‘ஓட்டக்காரர்(runners)’ என அழைக்கப்படும் அவற்றின் வேர்கள் மிகவும் துளையிடும்(invasive) தன்மை கொண்டவை.(எளிதாக வளர்ந்து, புதிய இலைகளையும் புதிய செடிகளையும் மிக சீக்கிரமாக உண்டாக்க கூடியவை) நாம் கவனமாக இருக்காவிட்டால் நம் பூந்தோட்டம் முழுதையுமே அபகரிக்க கூடியவை. எனவே பின் வரும் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை(DOs):

 • புதினா வளர்க்க முடிவுசெய்தால் முதலில் அதற்கு முழுமையான காலை சூரிய ஒளியும் பகுதியாக மதிய சூரிய வெளிச்சமும் கிடைக்க கூடிய இடமாய் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • புதினா வளர்ப்பதற்கு இரண்டு முறைகளை பின்பற்றலாம் – ஒன்று புதினா வெட்டுக்களை(cuttings) பயன் படுத்தலாம், அல்லது ஒரு இளம் புதினா செடியை கடையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
 • வெட்டுகளில் வேர் வர அவற்றை நீரில் ஒரு செ.மீ.(cm) மூழ்கவைத்து வேர்வரும் வரை வைத்திருக்கவேண்டும்
 • அதனை ஒரு கலத்தில்(container) நட வேண்டும்.
 • அந்த கலத்தை மண்ணில் புதைத்து அதன் விளிம்பு மண்ணில் புதையாதவாறு வைக்க வேண்டும். அதன் மூலம் அதன் வேர்கள் பரவாதவாறு தடுக்க முடியும். இல்லை என்றால் அவை களைகளை போல வளர்ந்து விடும்.
 • கலனில் பயன்படுத்தும் மண், பாதி மண் பாதி உரம் நிறைந்த கலவையாய் இருத்தல் வேண்டும்
 • புதினா பூக்கும் முன் அதனை அறுவடை செய்து விட வேண்டும்
 • அவற்றிற்கு நிறைய நீர் தேவை. அதே நேரத்தில் நீரில் செடி மூழ்காதவாறும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
 • அறுவடை காலத்தை நீட்டிப்பிக்க பூக்கும் மொட்டுக்களை தோன்றும் போதே கிள்ளிவிட வேண்டும்.
 • தோட்டத்தில் நடப்போவதானால் சுற்றிலும் தழைக்கூழ்(mulch) வைப்பதன் மூலம் அவை மற்ற இடங்களில் பரவாமல் பாதுகாக்கலாம்
 • ஒவ்வொரு செடியையும் 15 அங்குலம் தூரத்தில் நட்டு சரியாக கத்தரித்து வரவேண்டும்.
 • கலங்களில் நடப்போவதாகில் காலை சூரிய வெளிச்சம் பட கூடிய இடத்தில் அதே நேரத்தில் வெப்பத்தால் கருகாதவாறும் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை(DON’Ts):

 • தோட்டத்தில் நடும்போது முதலில் ஒரு கலத்தை உள்ளே புதைக்காமல் புதினாவை நேரடியாக நடுவது கூடாது.
 • அப்படி கலங்களில் நடுவதானாலும் கலங்களில் விரிசல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் அந்த விரிசல் வழியாகவும் அதன் வேர்கள் படர கூடும்.
 • நீரில்லாமல் செடி வாடுமாறு விட கூடாது.

வாசகர்களுக்கு: தங்களின் புதினா வளர்க்கும் அனுபவத்தினை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்படி அதனை படியவைத்து அதே சமயத்தில் செழிப்பாகவும் வளர்க்கிறீர்கள் என எங்களுடன் பகிருங்கள்.

மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறோம்.

3 thoughts on “புதினா வளர்த்தல்(பகுதி-1)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது