பிலாகை பற்றி

Spread the Green love!

விரைவான சில கேள்விகள்

நீங்கள்…

  • பசுமையை மிகவும் மிஸ் பண்றீங்களா?
  • செடி வளர்க்க ரொம்ப பிடிச்சும் அதில் சிரமப் படுபவரா?
  • இன்னும் செடி வளர்ப்பதில் நிறைய கற்க ஆசை கொண்டுள்ளவரா?
  • சொந்தமாக நாமே உணவை வளர்க்க வேண்டும் என நினைப்பவரா?

இந்த கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது நீங்கள் ஆம் என்ற பதில் அளித்திருந்தால் இந்த வலைத்தளம் உங்களுக்கானது தான்.

இங்கே பசுமை தொடர்பான எல்லா தகவல்களையும பெறலாம். அதுமட்டுமல்லாமல் செடி வளர்ப்பு சம்பந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடைகளையும் கேட்டு தெரிந்து கொண்டு உங்களுக்கு விருப்பமான செடிகளை நீங்களே வளர்க்க ஆரம்பித்து விடலாம்.

ஏன் இந்த பிலாகை தொடர வேண்டும்?

 உண்மையில் சொல்ல போனால் மேலே நீங்கள் கண்ட கேள்விகள் அனைத்தும் எனக்கும் இருந்தது. இதற்கான விடைகளை தேடும் போது தான் தமிழில் (நம்ம ஊரில்) இப்படி பட்ட தகவல்களை பெற எளிதான வழி எதுவும் பெரிதாக இல்லை என்பது தெரிந்தது.

அப்போது தான் நமக்கு தெரிந்ததை நாம் ஏன் எல்லாருடனும் பகிர கூடாது என்னும் யோசனை வந்தது. அது தான் இந்த பிலாக். இங்கே தோட்டம் மற்றும் செடி வளர்ப்பு சம்பந்தமாக எனக்கு தெரிந்த (தெரிந்து கொண்டே வருகிற) அனைத்து தகவல்களையும் உங்களுடன் பகிர போகிறேன்.

ஏன் இந்த யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் என்னும் பெயர்?

தனிப்பட்ட முறையில் எனக்கு(சந்தோஷிற்கு) உழவில் பெரிய ஆர்வம் உள்ளது. ஆனால் நம்மில் அநேகரை போலவே நானும் நகரத்தில் வளர்ந்ததால் உழவை பற்றி பெரிதாய் கற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதனால் அதற்கு பதிலாக சிறு வயதிலிருந்தே மாடித்தோட்டம் போட ஆரம்பித்தேன்.

அப்போதிலிருந்து தோட்ட பராமரிப்பு/அமைப்பு தொடர்பாக அநேக முறை திக்கி திணரியிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கிருந்த கேள்விகளுக்கு யாராவது விடை சொன்னால் நல்லா இருக்குமே என அநேக முறை சிந்தித்ததுண்டு.

இணையம் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபின் தான் இது தொடர்பாக நிறைய வெளிநாட்டு வலைத்தளங்கள் இருப்பது எனக்கு தெரிய வந்தது. ஆனாலும் இந்திய தளங்கள் நிறைய இல்லை. அதிலும் தமிழ் தளங்கள் சுத்தம்.

என்னதான் வெளி நாட்டு தளங்களில் நல்ல தகவல்கள் இருந்தாலும், அவர்கள் பின்பற்றும் முறைகள் நம் ஊரில் செட் ஆவதில்லை. எனவே நாம் பகிரலாம் என முடிவெடுத்தத்தும், தளத்திற்கு பெயர் தேட வேண்டியிருந்தது. தொடக்கத்தில் இங்கே உணவு செடிகளை பற்றி மட்டும் தான் பதிவிட வேண்டும் என நினைத்திருந்தேன். உழவை பற்றி ஒன்றும் தெரியாத என்னாலேயே உணவு செடிகளை வளர்க்க முடிகிறதென்றால் எல்லாராலும் முடியும் என எனக்கு தோன்றியது. அப்படி வந்த பெயர் தான் இது – Anybody Can Farm.

யாரிந்த சந்தோஷ்?

Santhosh
ஹலோ மக்களே! இது தான் நான்

நம் நாடு உருவாக்கிய அநேக பொறிஞர்களுள்(அட அதான் பா எஞ்சினேயர்) நானும் ஒருவன். ஆல்ரெடி உங்களுக்கு தெரிந்திருக்கும் எனக்கு செடிகள் என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து தோட்டவேலைகளில் ஈடுபட்டுள்ளேன். என் அம்மா தான் எனக்கு இதற்கு உத்வேகம் அளித்தவர் (Inspiration). அவரும் தோட்டம் வைத்திருந்தார் அதில் நிறைய செடிகள்/மரங்கள் வைத்திருந்தார். அது எனக்கும் தொற்றிக்கொண்டது.

எனக்கு கவிதைகள் எழுதுவது ரொம்ப பிடிக்கும். ஒரு முறை போட்டியில் கூட வென்றுள்ளேன்(கொஞ்சம் கெத்து காட்ட வேண்டியது தான்). வரைவதும் பிடிக்கும். அப்புறம் முக்கியமானது சென்னை பையன் ங்க நானு! என்னை பற்றி தெரிந்து கொள்ள அவ்வளவு தான் என நினைக்கிறேன்.

என்னை தொடர்பு கொள்ள நினைத்தால் இடப்பக்கத்திலிருக்கும் WhatsApp ஐகானை கிளிக் செய்யுங்கள். இல்லை [email protected] என்கின்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த பிலாகை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என என்னுடன் பகிருங்கள்!

புது பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள வலது பக்கத்திலுள்ள ஃபார்மை(form) பூர்த்தி செய்து Subscribe செய்யுங்கள்.

உங்களுக்கு செடிகள் தொடர்பாக என்ன சந்தேகங்கள் இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளலாம். நானும் இன்னும் செடி வளர்ப்பை கற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறேன், வாருங்கள் நாம் சேர்ந்து வளரலாமே!