பாலைவனத்தின் வெங்காயம் – வெல்விட்சியா மிராபிலிஸ்

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_2

#பாலைவனத்தின் ‘வெங்காயம்’

#வெல்விட்சியா_மிராபிலிஸ்

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி வெல்விட்சியா மிராபிலிஸ்! பார்க்க வசீகரமாக இல்லாவிட்டாலும் நாம்பியாவை சொந்த ஊராக கொண்டுள்ள இந்த செடி, ஆயிரத்தில் ஒன்று தான். சொல்லப்போனால் இதை போன்று வேறு செடியே கிடையாது! வெல்விட்சியா மிராபிலிஸ் எல்லா செடிகளை போன்றும் கிடையாது இதில் உறுதியான தண்டு, வேர், மற்றும் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். ஆம் அவ்வளவு தான்! செடி முளைக்கும் போது இருக்கும் இவ்விரண்டு இலைகளும், ஹாலிவுட் படத்தில் வரும் வேற்றுகிரகவாசிகளின் கை காலகள் பொல் இதன் வாழ்நாள் முழுதும் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் தண்டு உயரமாக வளர்வதை விட்டு அகலமாக வளர்கின்றது.

இவ்வாறு அது 2 மீட்டர் வரை உயரமும், 8 மீட்டர் வரை அகலமும் கொள்கின்றது. இவற்றின் சராசரி வாழ்நாள் சுமார் 400-1500 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை டைனோசர் காலத்து செடிகளாக இருந்திருக்க வேண்டும் என நிபுணர்கள் யூகிகின்றனர். மிகவும் வரட்சியிலும் உயிர்வாழும் இதன் திறனே இதன் நீன்ட ஆயுசுக்கு காரணம். இவற்றால் 5 ஆண்டுகள் வரை தண்ணீரே இல்லாமல் வாழமுடியும். இதுமட்டுமல்லாமல் இது மிகவும் சுவையாகவும் இருக்குமாம். இதனை பச்சையாகவோ, கரியில் வேகவைத்தோ உண்ணலாம். இதன் காரணமாகவே இதனை ‘ஒனியாங்கா’ என்று அழைக்கின்றனர். இதற்கு பாலைவனத்தின் ‘வெங்காயம்’ என்று அர்த்தமாம். இதை நம் வீட்டிலும் வளர்க்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது