#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_07
#அட்ரிகுலரியா_இனங்கள்
#நீர்மூழ்கி_தாவரம்
இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘அட்ரிகுலரியா இனங்கள்’! – நீர்மூழ்கி தாவரம்.
பிலாடர்வோர்ட் என்று அழைக்கப்படும் இந்த பைமிதப்பி செடிகள் உலகின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப பகுதிகளில் உள்ள ஏறிகளிலும் குளங்களிலும் சரளமாக காணப்படுபவை. சரி இதில் என்ன அப்படி என்ன சுவாரஸ்யம் உள்ளது? என கேட்கிறீர்களா! இவை மூழக கூடிய மிதக்கும் புலால்( மாமிசம் உண்ணும்) தாவர வகை ஆகும். என்ன சொல்கிறீர்கள், புரியவில்லையே ? என்கிறீர்களா! இவை தன்னிடம் உள்ள காற்று பைகளை பயன்படுத்தி பூ பூக்கும் காலத்தில் மட்டும் தண்ணீருக்கு மேலே வருகின்றன. மற்ற நேரங்களில் தண்ணீருக்குள் சென்று ஒரு நீர்மூழ்கி கப்பல் போல் செயல் படுகின்றன. இதனாலேயே இவை நீர் மூழ்கி தாவரங்கள் என செல்லமாக அழைக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் இவை தன்னிடம் உள்ள பைகளை தன் இறைகளை பிடிக்கவும் பயன்படுத்துகின்றன. நீருக்கடியில் இருக்கும் சிறு புழுக்கள் போன்ற முதுகெலும்பு இல்லா பிராணிகளை தன் பைகளில் வெற்றிடங்களை(வாக்கம் – vaccum) உருவாக்கி சிறைப்பிடிக்கின்றன. இவ்வாறு நாம் பொதுவாக அறிந்த வீனஸ் ஃப்லை டிராப் (Venus Fly Trap) தாவரத்தை விட மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன. சில சமயங்களில் இதன் பைகளில் சிறு மீன்களை கூட காண முடியும்.
மற்ற புலால் உண்ணும் தாவரங்களை போல் இல்லாமல் இவை இங்கு வேண்டுமானாலும் பிழைத்து வாழக்கூடியவை. இதனால் அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளின் சில பகுதிகளில் இவற்றை அழிவு செய்யும் உயிரினங்களாக(பெஸ்ட் – Pest) கருதி அழித்து வருகின்றனர்.
ஒரு குலத்திற்குள் நுழைந்த பிறகு இவை தன் ஊசி போன்ற தண்டுகளை குலத்தின் ஓரத்தில் பதித்து அங்கேயே தன்னை இணைத்து கொள்கிறது. இப்படியும் ஒரு செடி இருக்கிறதா என்று நம்மை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் இந்த செடி நமது தொடரில் இடம் பெற எல்லா தகுதிகளும் வாய்ந்ததே!
இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!