நடன செடி – கொடரியூகளிக்ஸ் மோட்டோரியஸ்

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_03

#நடன_செடி

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘நடன செடி‘!

பொதுவாக நல்ல தாளம் கேட்டாலே தானாக நம் உடல் ஆட்டம் பொட தொடங்கி விடும். நம்மை போல ஆட்டம் போடும் ஒரு செடி இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

உண்மையில் அப்படி ஒரு செடி இருக்கிறது. கொடரியூகளிக்ஸ் மோட்டோரியஸ் – Codariocalyx motorius (அல்லது டெஸ்மொடியம் கைரா ஸ் -Desmodium gyrans ) தான் இந்த ‘நடன செடி’. தாறுமாறாக அசையும் இந்த செடி வெப்பமண்டல ஆசியாவை சேர்ந்த புதர் வகையை சார்ந்த செடியாகும். இதன் இலைகள் மேலும் கீழும் அசைவதை பார்க்கும் பொது இச்செடி ஆட்டம் போடுவது போலவும் டெலிகிராப் அனுப்புவது போலவும் தோன்றுகிறது. இதனால் இதனை ‘டெலிகிராப் செடி‘ என்றும் அழைக்கின்றனர்.

இதனை எந்த டைம் லேப்ஸ் (time lapse) உம் இல்லாமல் வெறும் கண்களால் இதன் நடனத்தை பார்க்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்த செடியில் இரண்டு வகையான இலைகள் இருக்கும் ஒன்று பெரியதாயும் மற்றொன்று சிறியதாயும் இருக்கும். இந்த சிறிய வகை இலைகள் செடியுடன் கீல் போன்ற அமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த இலைகளால் சுலபமாக அசைய முடிகிறது.

இவை ஒளி இருந்தால் மட்டும் தான் இப்படி நடனம் பண்ணுகின்றன. இது சூரியகாந்தி செடியை போல சூரியன் இருக்கும் திசை நோக்கி சட்டென நகர்கிறது இந்த நகர்தலே நமக்கு நடனம் போல காட்சி அளிக்கிறது. இந்த செடி தன்னால் முடிந்தவரை சூரிய ஒளியை பெற முயல்வதே இதற்கு காரணம். சில சமயங்களில் மென்மையான தொடலுக்கும் அதிர்வுகளுக்கும் கூட அசைகின்றன. மாலையில் இதன் இலைகள் கீழாக தொங்கிவிடுகின்றன.

ஆசியாவிலுள்ள சீனா, இந்தியா, வங்காளம், லாவோஸ், மலேசியா, பாகிஸ்தான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் வனப்பகுதிகளில் இந்த செடி பரவலாக காணப்படுகின்றது. இதிலுள்ள
காரப்போலிகள் காரணமாக இதனை மருந்து தயாரிப்புகளிலும் பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கும் வேடிக்கை விரும்புவோருக்கும் இந்த செடி களிப்பூட்டக்கூடியது. ஆம் இந்த செடியை நாம் வீட்டிலும் வளர்க்கலாம்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது