–தீபாவளி லேகியம்–

Spread the Green love!

வணக்கம்.
தீபாவளித் திருநாள். வழக்கமாக பத்தியம் இருப்பவர் கூட அதை ஒத்தி வைத்து விட்டு முறுக்கு, சீடை, அதிரசம், ஜாங்கிரி மற்றும் பல்வேறு வகையான பலகாரங்களை ஒரு கை பார்க்கும் வேளை. இந்தியாவில் பருவ நிலை மாற்றம் வரும் காலத்தில் தான் தீபாவளி வருகிறது. இந்த காலகட்டத்தில் தான் நம் உடல் பருவ மாற்றத்திற்கேற்ப பக்குவப்படுத்திக்கொள்ளும். மேலும் இந்த சமயத்தில் தான் ஜலதோஷம் மற்றும் பல தொற்று நோய்கள் பரவும். “தீபாவளி லேகியம்” நம் செரிமான அமைப்புக்கு புத்துணர்ச்சி தந்து நச்சு உற்பத்தியை தடுக்கும். நொறுக்குத் தீனியால் வரும் உடல் உபாதைகளை நொறுக்கித்தள்ளும்.

img_20161028_204847தேவையான பொருட்கள்:

1. ஓமம் – 25gm
2. அரிசி திப்பிலி – 20gm
3. கண்டந்திப்பிலி – 20gm
4. அதிமதுரம் – 10gm
5. சுக்கு – 25gm
6. சித்தரத்தை – 10gm
7. சிறு நாகப்பூ – 10gm
8. பரங்கிப்பட்டை – 10gm
9. வாயுவிடங்காய் – 20gm
10. வால் மிளகு – 10gm
11. மிளகு – 4tbsp
12. காய்ந்த பேரீட்சை – 100gm
13. காய்ந்த திராட்சை – 50gm
14. நெய் – 300gm
15. வெல்லம் – ¾kg

 

செய்முறை:

  • பேரீச்சையை சுடுதண்ணீரில் நன்கு ஊறவைத்து,
  • கொட்டையை நீக்கி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  • வெல்லம் தவிர சீரகம், திப்பிலி, வால்மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்யவும் (தேவை படுபவை பட்டியலில் மீதம் உள்ள மற்றவற்றையும் சேர்த்துக்கொள்க).
  • அடுப்பில் வாணலியை வைத்து வெல்லத்தை பொடித்து போடவும். நெய் சேர்த்து கரைந்த உடன் பேரிச்சையை போடவும்.
  • இதனுடன் பொடித்து வைத்துள்ள கலவையைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
  • உப்பு சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
  • கலவை திரண்டு கெட்டியாகி அல்வா பதம் வந்த உடன் இறக்கி ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

பயன்கள்

  • தீபாவளி லேகியம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம் ஏற்படாது, வயிற்றுப் பொருமல் இருக்காது. சளி பிடிக்காது. இதேபோல் மிளகு, இஞ்சி, ஓமம், திப்பிலி, கொத்தமல்லி, மஞ்சள்தூள், கசகசா, இலவங்கம், ஏலம், வெல்லம், நெய், நல்லெண்ணெய் சேர்த்து வேறு விதமாகவும் தீபாவளி லேகியம் செய்யலாம். தீபாவளி லேகியம் கையில் இருந்தால் தைரியமாக தீபாவளி பலகாரத்தை ஒரு பிடி பிடிக்கலாம்.

மீண்டும் உங்களை அடுத்தபதிவில் சந்திக்கிறோம். அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்!

One thought on “–தீபாவளி லேகியம்–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது