சிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி?

Spread the Green love!

     ரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனை வகைகள் இருந்தால் என்ன எல்லாமே நம்மை கவரும் அழகிய இதழ்களையும், நம் மூக்கை சுண்டி இழுக்கும் வாசனையும் கொண்டவை தான். அது சரி இந்தசிறிய ரோஜாக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சிறியதாக இருந்தாலும் இவற்றிற்கும் இதே குணங்கள் தான் இருக்கின்றன. இந்த பதிவின் மூலம் நீங்கள் சில வகை சிறிய ரோஜாக்கள்(miniature roses) பற்றியும் அவற்றின் வளர்ப்பை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

சரியான வகையை தேர்ந்தெடுத்தல்:

 இந்த பகுதி தான் இருப்பதிலேயே மிக கடினமான பகுதி. ஆனால் எங்களால் இதில் உங்களுக்கு உதவ முடியும் என நினைக்கிறோம். கீழே நீங்கள் உங்கள் வீடுகளை அலங்கரிக்க கூடிய வெவ்வேறு நிற சிறிய ரோஜாக்களை பற்றி பார்ப்போம். எந்த வகையான சிறிய ரோஜாவை வளர்க்க போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

எளிதில் வளரக் கூடிய ஒரு சில சிறிய ரோஜா வகைகள்…

 

  • தாவரவியல்பெயர் : ரோசாஸ்பைகப் (Rosa spicup)

          பொதுபெயர்           : கப்கேக்

          நிறம்                          : இளஞ்சிவப்பு

 

 

  • தாவரவியல்பெயர் : ரோசாப்யூட்டீ சீக்ரட் (Rosa beauty secret)

         பொதுபெயர்            : ப்யூட்டீ சீக்ரட்

         நிறம்                           : சிவப்பு

 

 

  • தாவரவியல்பெயர் : ரோசாயெல்லோ டால் (Rosa yellow doll)

         பொதுபெயர்             : யெல்லோ டால்

         நிறம்                           : மஞ்சள்

 

 

  • தாவரவியல்பெயர் : ரோசாவின்டர் மேஜிக் (Rosa winter magic)

         பொதுபெயர்            : வின்டர் மேஜிக்

         நிறம்                           : கத்திரிப்பூ

 

 

  • தாவரவியல்பெயர் : ரோசாஆட்டம் ஸ்பெலன்டர் (Rosa autumn splendor)

        பொதுபெயர்             : ஆட்டம் ஸ்பெலன்டர்

         நிறம்                           : மஞ்சள் மற்றும் சிவப்பின் கலவை

 

 

  • தாவரவியல்பெயர் : ரோசாஹைப்ரிட் (Rosa hybrid)

         பொதுபெயர்             : காஃபி பீன்

         நிறம்                          : இருண்ட பழுப்பு

நீங்கள் விரும்பும் வகையினை அருகில் உள்ள நாற்றுப்பண்ணையிலிருந்து(nursery) பெற்றுக் கொள்ளுங்கள்.

தகுந்த இடம்:

 ரோஜாக்களுக்கு நிறைய சூரிய வெளிச்சம் தேவைப்படுவதால் இவற்றிற்கு தனி இடம் தேவைப்படுகிறது. உங்கள் தோட்டத்தில் இச்செடிகள் நெரிசல் ஆகாமலும் 6 முதல் 8 மணி நேரம் சூரிய ஒளி பெறக்கூடிய ஓர் இடத்தை தேர்வு செய்யுங்கள். இச்செடியின் சில வகைகள் நிழலிலும் வளரக் கூடியவை.

மண்:

 இத்தாவரங்கள் வளமான ஈரப்பதம் மிக்க மண்ணை விரும்புகின்றவை, எனவே தேவைப் பட்டால் மண்ணிற்கு கரிம கலப்பு உரம்(organic compost) பயன்படுத்துங்கள்.

செடி நடுதல்:

 செடியை நடுவதற்கு அதை வாங்கி வந்த பூந்தொட்டியை விட பெரியதான ஒரு குழியை தோண்டுங்கள். நீங்கள் வேறு ஒரு செடியிலிருந்து கிளையின் ஒரு பகுதியை வெட்டி நட்டு புதிய செடி வளர்ப்பதாய் இருந்தால் குழியின் ஆழம் 1 அடிக்கு மேலாக இருக்க வேண்டும். செடியை குழியில் நடும்போது அதன் வேர்கள் நன்கு படர்ந்து இருக்க வேண்டும். மேலும் அக்குழியில் நன்கு மண் அடைக்கப்ப்ட்டிருக்க வேண்டும் அப்போது தான் வேர்கள் மண்ணுடன் நன்கு இணைந்திருக்கும்.

தண்ணீர்:

இவ்வகை செடிகளுக்கு அதிகம் நீர் தேவைப்படும் எனவே தண்டுக்கு அருகில் இலைகளில் படாதவாறு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.

ஈரப்பதம் மற்றும் உரம்:

 மட்கும் இலைகள் அல்லது கலப்பு உரத்தை செடியை சுற்றி வைப்பதன்(முடாக்கிடுதல்) மூலம் ஈரப்பதத்தை தக்கவைத்து மேலும் தேவையில்லா செடிகளை தவிர்க்கலாம். எரியம்(phosphorus) மிக்க உர வகைகள் இவைகளுக்கு ஏற்றவை.

இவை எளிதில் வாடாத செடி வகையை சார்ந்தவை அதோடு இவை குளிர் மற்றும் வசந்த காலத்தில் பூக்கக் கூடியவை.

இதோ அதற்கான வழிமுறை…

கலன்களை தேர்ந்தெடுத்தல்:

எங்களிடம் தோட்டம் இல்லையே என கவலைபட வேண்டாம். இவை கொள்கலன்களிலும் எளிதாக வளர கூடியவை. செடி நடுவதற்கு ஏதுவான பழைய வாளி அல்லது மண் / வேறு தொட்டிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவை குறைந்தது 15 அங்குல ஆழமாவது பெற்றிருக்க வேண்டும்.

வடிகால்துளைகள்:

 அக்கலன்களில் வடிகால் துளைகள் இல்லையெனில் , பல துளைகளிட்டு அடியில் வடிகாலுக்கு உதவுவதற்கு ஏற்ப சரளை கற்களை (gravel) கீழ் அடுக்காக பயன்படுத்த வேண்டும் . இது பொதுவாக கொள்கலன்களில் வளர்க்கப்படும் எல்லா செடிகளுக்கும் செய்யப்படுவதே.

அவ்வளவு தான். உங்களுக்கு ஏற்ற சிறிய ரோஜா வகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தொட்டியில் தோட்ட மண் மற்றும் கலப்பு உரம் சேர்த்து பின்னர் செடியை நட்டு, சரியான இடத்தில் தொட்டியை வைத்து அடிக்கடி நன்றாக தண்ணீர் ஊற்றி வாருங்கள். முதலில் ஏதெனும் ஒரு வகை சிறிய ரோஜாவை தேர்வி செய்து வளர்த்து பாருங்கள். அது வெற்றி அடைந்ததும் கலந்து கூட வளர்க்க ஆரமிக்கலாம்.

எங்களது அடுத்த பதிவில் சிறிய ரோஜாக்களை பற்றிய மேலும் சில தகவல்களுடன் உங்களை சந்திக்கிறோம்.

தொடர்ந்து எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி.

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது