#பூ_03
[edsanimate_start entry_animation_type= “wobble” entry_delay= “0” entry_duration= “0.5” entry_timing= “linear” exit_animation_type= “” exit_delay= “” exit_duration= “” exit_timing= “” animation_repeat= “1” keep= “yes” animate_on= “hover” scroll_offset= “” custom_css_class= “”]சிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி?[edsanimate_end] பற்றிய எங்களது முந்தைய பதிவு உங்களுக்கு அவற்றை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வர வைதிருக்கும் என நம்புகிறோம். அந்த பதிவினை நீங்கள் படிக்கவில்லை என்றால் அதனை படியுங்கள் ஏனென்றால் இந்த பதிவு அவற்றினை நீங்கள் வளர்க்க ஆரம்பித்து இருப்பீர்கள் என்ற ஊகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பதிவில் இவற்றினை எப்படி இன்னும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
கலப்பு உரம்:
எந்த ஒரு செடியானாலும் அவை செழிப்பாக இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கலப்பு உரம்(Compost). சிறிய வகை ரோஜாச்செடிகள் நன்றாக பூக்க அவைகளுக்கு எரியம் மிக்க ஊட்டச்சத்து மிகவும் முக்கியம். இதற்கு நமக்கு எளிதாகவும், சுலபமாகவும் கிடைக்ககூடிய பொருள் – வேறென்ன வாழைப்பழம் தான். நீங்கள் இவைகளுக்காக தயாரிக்கும் கலப்பு உரத்தில் வாழைப்பழத் தோல்கள் அதிகமாக இருப்பது அவசியம்.
இங்குள்ள சில வழிகளையும் பின்பற்றி வாழைப்பழங்களை உங்கள் செடிகளுக்கு உதவுமாறு செய்யலாம்.
- வாழைப்பழத் தோல்களை சிறு துண்டுகளாக வெட்டி, அவற்றை மண்ணில் புதைத்து விட வேண்டும் (நீங்கள் அவற்றை இலைகளுக்கு அடியில் தண்டில் படாதவாரு புதைக்க வேண்டும்). தோண்டும்பொழுது வேர்கள் பாதிக்கபடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். 4 அங்குல ஆழத்தில் அவற்றை புதைப்பது நல்லது.
- வாழைப்பழத் தோல்களை நன்றாக அரைத்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். அந்த கரைசலை 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து திட பொருட்கள் அடியில் தங்கிய பின்னர் அந்த நீரை தண்டுகளில் படாதவாறு மண்ணில் ஊற்றி விட வேண்டும். மீதம் உள்ள பொருட்களை கலப்பு உரத்துடன் பயன்படுத்தலாம்.
தழைக்கூளம்(mulch):
தழைக்கூளம் அல்லது முடாக்கு என்பது மண்ணில் பலவற்றை கட்டுபடுத்த இயற்கையின் சிறந்த முறை. இதனை தாவரத்தை சுற்றி உள்ள மண்ணில் போடப்ப்டும் கரிம பொருட்களால்(பொதுவாக) ஆன ஓர் அடுக்கு.
அதன் பயன்பாடுகள்
- ஈரப்பதத்தை தக்கவைத்தல்
- மண்ணின் வளத்தையும் ஆரோக்கியத்தயும் மேன்படுத்தல்
- களைகளை கட்டுப்படுத்துதல்
சிறிய ரோஜாகளுக்கும் இவை தேவை. இலைகள், மரத்தூள், வெட்டப்பட்ட காகிதங்கள் மற்றும் அட்டை, புல் போன்றவற்றை தழைக்கூளமாக பயன்படுத்தலாம்.
பூச்சி தாக்குதல்கள்:
சிலந்திகள் மற்றும் அஃபிட்கள் (aphids) இச்செடிகளை தாக்கும் பூச்சிகள். தண்ணீரை செடிகள் மீது நன்றாக தெளிப்பதன் மூலம் சிலந்தி வலைகள் கலைந்து பூச்சிகள் கீழே விழுந்துவிடும். அஃபிட்களை தடுப்பதற்கு தண்ணீர் அல்லது தண்ணீர் மற்றும் சோப்பு சேர்த்து தெளிக்கலாம். இவ்வாறு செய்த மறுநாள் இலைகளிலிருந்து சோப்பை நன்றாக நீக்க வேண்டும். இல்லை என்றால் அவை இலைகளின் துவாரங்களை அடைக்கக் கூடும். இவ்வாறு இந்த இரு பூச்சி தாக்குதல்களையும் கட்டு படுத்தலாம்.
நோய்கள்:
இவைகளுக்கு வரக்கூடிய இரண்டு முக்கியமான நோய்கள் கரும்புள்ளிகள் மற்றும் பௌடரி மயில்டியுஸ்(powdery mildews).இவ்விரண்டுமே பூஞ்சையால்(fungus) வரும் நோய்கள். கரும்புள்ளிகளை போக்குவதற்கு நீங்கள் 1 அல்லது 2 மேஜைக்கரண்டி சமையல் சோடாவை 1 காலன் (3.7லி) நீரில் கலந்து அதோடு ப்ளீச் இல்லாத பாத்திரங்களுக்கான சோப்பையும் கலந்து பாதிக்கப் பட்ட இடத்தில் தெளிக்க வேண்டும். இதே போன்று பாலுடன் நீர் சேர்த்து (1:10 விகிதம்) தெளிப்பது பௌடரி மயில்டியுஸ்கான சிறந்த தீர்வு.
கத்தரித்தல்(prunning):
இச்செடிகளை வசந்த காலத்தின் தொடக்கத்தில் சீரமைக்க வேண்டும். முதலில் காய்ந்த மரப்பட்டைள் மற்றும் நிரம் மாறியுள்ள கிளைகளை அகற்ற வேண்டும். பின்பு ஒன்றின் மேல் ஒன்றாக வளர்ந்திருக்கும் கிளைகளை அகற்ற வேண்டும் ஏனெனில் அவற்றில் இலைகள் தோன்றும் போது அவற்றிற்கு போதிய சூரிய வெளிச்சம் இல்லாமல் போகலாம். இறுதியாக மீதம் இருக்கும் கிளைகளை அவற்றின் முந்தைய அளவில் 3 இல் 1 பங்காகும் படி கத்தரிக்க வேண்டும்.
இதற்குப் பிறகு செடியை சுற்றி உள்ள பழைய இலைகள் மற்றும் கிளைகளை அகற்ற வேண்டும். சிதைவடைந்த பொருள் அங்கு ஏதேனும் இருந்தால் அவை பூச்சிகள் மற்றும் நோய்களை உண்டாக்கக்கூடும். அதோடு புதிய தழைக்கூள அடுக்கை போடுவதன் மூலம் செடிகள் மீண்டும் நன்றாக வளரும்.
பரவச்செய்தல்(propagation):
இவை தண்டு வெட்டுதல்(stem cutting) முறை மூலம் பரவக் கூடிய செடிகள். முட்கள் வளையத் தொடங்கும் போது நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும். தண்டுகள் 3-4 அங்குல நீளம் இருந்தால் வேர்கள் நன்றாக வரும்.
தண்டுகளை வெட்டிய பின்னர் அவற்றை தனித்தனியாக சிறு தொட்டிகளிலோ பாகெட்டுகளிலோ வைக்கலாம். இவற்றிற்கு வெது வெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் , குளிர்ந்த நீரால் அவை அழுக வாய்ப்புண்டு. வேர்கள் வரும் வரை இவற்றை நேரடியாக சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டாம், மிதமான வெப்பத்தில் வைப்பது நல்லது. சராசரியாக 3 முதல் 6 வாரங்களில் வேர்கள் வளரத் தொடங்கிவிடும். பின்னர் அவற்றை பெரிய தொட்டிகளுக்கோ தோட்டத்திற்கோ மாற்றி விடலாம்.
பயன்பாடுகள்:
சிறிய ரோஜாக்கள் முக்கியமாக அதன் அழகிற்காக வளர்க்கப்படுகின்றன. இதைத் தவிர அவற்றை பூச்செண்டுகளில் பயன்படுத்தலாம். மேலும் விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்சிகளின் போது அறைகளை அலங்கரிக்க பயன்படுத்தலாம். சில வகைகள் வாசனை திரவியம் தயாரிக்க பயன்படுகின்றன.
இந்தப் பதிவு உங்கள்க்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துகளை தயங்காமல் எங்களுக்கு கமென்டில் தெரியஓடுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்குகம் சந்தேகங்கள், சிறிய வகை ரோஜாக்கள் வளர்ப்பில் நீங்கள் சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கும் சிக்கல்கள், உங்கள் வளர்ப்பு முறை இவற்றை பற்றியும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மீண்டும் உங்களை எங்கள் அடுத்த பதிவில் சந்திக்கிறோம். இதனை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
நன்றி.