கொள்கலன் தோட்டம்

Spread the Green love!

தொட்டிகளிலும், கொள்கலன்களிலும் செடி வளர்ப்பது என்பது நமக்கு ஒன்றும் புதுமையானது கிடையாது. மனிதர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே கொள்கலன்களிலும் பாத்திரங்களிலும் செடிகள் வளர்த்து வருகின்றனர். காலப்போக்கில் வளர்க்கும் முறைகளும் அதற்கு பயன்படும் கருவிகளும் மாறினாலும், இதன் நோக்கம் மாறவில்லை. நமக்கும், நம் அன்பார்ந்தவர்களுக்கும் உணவிற்கும் அழகுக்கும் தான் நாம் இதை செய்கிறோம்.

ஆதிகாலத்தில் தொட்டிகளில் செடிகள் வளர்க்க ஆரம்பித்த மனிதர்கள், மோசமான நிலத்தை மேற்கொள்ளவும், மருத்துவ செடிகளை அதிக கவனம் கொண்டு வளர்க்கவும், நீர் பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் செடிகளை சிறிதளவில் வளர்க்கவும் தான் இதனை செய்தனர். ஆனால் இன்றைய தோட்ட பராமரிப்பாளர்களுக்கு இதை விட வித்தியாசமான பல காரணங்கள் இருக்கின்றது. இன்றும் தோட்டத்தில் நிலவும் மோசமான வடிகால் பிரச்சனைகள், நிலத்தின் மலட்டு தன்மை, வேற்று நாட்டு செடிகளை வளர்க்கவும் நாம் தொட்டிகளை பெரிதும் பயன்படுத்துகிறோம். அனால் இதுமட்டுமல்லாமல், நேரத்தையும் இடத்தையும் மிச்சம் செய்யவும், களைப்பிடுங்கல் போன்ற மற்ற வேலைகளை குறைப்பதற்கும், நம் வாழ்விடத்தை அழகுபடுத்தவும், நம் சுய பாணியை வெளிப்படுத்தவும்(personal style) இது பெரிதும் உதவுகிறது.

கொள்கலன் தோட்டங்கள் நமக்கு வேண்டிய புதுமலர்ச்சியான(fresh) உணவுபொருட்களை தருவதோடு, குறைந்த இடததில் செடிவளர்க்கவும் அதனை பராமரிக்கவும் நிலத்தில் கிடைக்காத ஒரு சுதந்திரத்தையும் நமக்கு அளிக்கிறது. கொள்கலன்களில் செடிகள் வளர்ப்பது மூலம் நம் குடும்பத்திற்கு தேவையான உணவுகளை நம்மால் எந்த வகை உழவு உபகரணங்களும் இல்லாமலேயே வளர்த்துகொள்ள முடியும்.

கொள்கலன் தோட்டத்தின் நோக்கு நம்மையும் தாண்டியது. இதன் மூலம் நாம் தேனீக்கள், வண்ணத்துபூச்சிகள் போன்ற மகரந்த சேர்க்கையாளர்களுக்கு உணவளிக்கிறோம், சிறு பறவைகளுக்கும் உணவளிக்கிறோம். கொள்கலன்களில் வாழ்விட(habitat garden) தோட்டம் அமைப்பதன் மூலம் அநேக உயிரினங்களுக்கு பெரிய முயற்சி மற்றும் இடவசதி இல்லாமலேயே உதவமுடியும்.

ஆனால் கொள்கலன்களில் தோட்டம் நிலைக்குமாறு வைப்பதற்கு வெரும் தொட்டிகளில் மண்ணை நிரப்பி செடியை நட்டு விட்டால் மட்டும் போதாது. கொள்கலன் தேர்வு, மண்ணின் குணம், செடி தேர்வு, மற்றும் பராமரிப்பு என இவை எல்லாவற்றிலும் அதிகம் கவனம் செலுத்தினால் நல்ல ஆரோக்கியமான, வளமான, பலன் தரக்கூடிய தோட்டம் அமைக்க முடியும். இதற்கு உங்களுக்கு உதவ தான் இந்த பகுதி. இதில் கொள்கலன் தோட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், நவீன முறைகள் என அனைத்தையும் உங்களிடம் கொண்டு சேர்ப்பது தான் எங்கள் நோக்கம்.

இந்த பகுதியில் கொள்கலன் தோட்டத்தின் மூன்று முக்கிய தூண்கள், கொள்கலன்களை எப்படி தேர்வு செய்வது, என்ன மண் உபயோகிப்பது, எப்படி உபயோகிப்பது, இப்படி பல தலைப்புகளை இந்த பகுதியின் மூலம் பார்ப்போம்.

இது எவ்வளவு வேடிக்கையானது என்றும், கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் கொஞ்சம் இடத்திலேயே எவ்வளவு நிறைய பலன்களை அறுக்கலாம் என்றும் நீங்கள் பார்த்துவிட்டால் நான் நேசிக்கும் அளவுக்கு நீங்களும் கொள்கலன் தோட்டத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். சரி வாருங்கள் தோட்டத்திற்கான வேலைகளை தொடங்குவோம்.

நீங்கள் ஏற்கனவே தொட்டிகளில் செடி வைத்துள்ளீர்களா? அப்போ உங்களுக்கு இது உதவும் – கொள்கலன் தோட்டத்தின் அடிப்படைகள்.