“குப்பைமேனி”

Spread the Green love!

 

வணக்கம்.
நம் நடைமுறை வாழ்வில், தெளிவுர அறிவு கொண்டு, பயன்படுத்தி பலன் அடையப்பட வெண்டிய ஒரு மூலிகை “குப்பைமேனி” . இது இதன் மருத்துவ குனாதிசயங்களுக்கும், ஆரோக்கியம் தரும் குணநலன்களுக்கும் பெயர் போனது. தமிழில் “குப்பைமேனி” என்று இது வழங்கப்படும் காரணம், இது பரவலாக பல இடங்களில் வளரும். இதற்க்கு தனிப்பட்ட பராமரிப்பு தேவை இல்லை. இதன் தாவரவியல் பெயர் “Acalypha Indica”. இது “Indian Nettle” என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது.

மழை பருவத்தின் தொடக்க நிலையில் இது அனேக இடங்களில் வளர்வதை காணலாம். உடல் ஆரோக்கியமும் மேனி ஆரோக்கியமும் தந்து அற்புதம் நிகழ்த்தும். ஜலதோஷம் மற்றும் சரும நோய்களுக்கு தீற்வாக விளங்கும். தேவையற்ற முடியை அகற்றுதலுக்கும் பயன்படும். குப்பைமேனி இலைகள் பொடியாக்கப்பட்டு கடைகளில் கிடைக்கிறது. பரவலாக குப்பைமேனி சருமனோய்களை குணபடுத்தவே பயன்படுத்தப்படுகிறது. நாம் குப்பைமேனி இலைகளைக் கொண்டு அற்புதமான எண்ணேய் தயாரிக்கலாம்.

இது மேனி ஆரோக்கியம் தந்து சிறிய தொற்றுகளை விரைவில் அகற்றும், மேலும் இந்த எண்ணெயை நாம் நம் வீட்டிலேயே எளிதாக தயார் செய்யலாம். சருமத்தின் காவலர்களாண தேங்காய் எண்ணெயும், மஞ்சளுமெ இந்த எண்ணெய்க்கு மூலப்பொருட்கள். உடல் மசாஜுக்கும் (உடல் உருவுதல்) இதை பயன்படுத்தலாம். சிறுவர் முதல் முதியோர் வரை இதை பயன்படுத்தலாம்.

குப்பைமேனி எண்ணெய்:

செய்முறை

 • kuppaimeni5 புதிய குப்பைமேனி இலைகளை எடுத்துக்கொள்ளவும். அழுக்கை அகற்ற நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
 • இந்த சுத்தப்படுத்தப்பட்ட இலைகளை கலக்கும் கருவியில் (மிக்சி) போட்டு தண்ணீர் சேர்த்து மிருதுவான பசையாக அரைக்கவும். பின் அதன் சாறை எடுக்கவும்.
 • இந்த குப்பைமேனி சாறு, முதல்தர தேங்காய் எண்ணேய், மஞ்சள் தூள், மூன்றையும் ஒரு வாணலியில் எடுத்துக்கொள்ளவும்.
 • அடுப்பில், நடுத்தர தீயில் (Medium flame) இந்த கலவையை சுட வைக்கவும். எண்ணேய் கொதித்துப் பொங்கி, “ஸ்” என்ற சத்தம் உண்டாகும்.
 • இது நடந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
 • பின் எண்ணெய் சூடு தணிந்து, திரிய விடவெண்டும்.
 • எண்ணெயை கண்ணாடி குப்பியில் சேகரித்து வைக்கவும்.
 • சரும நோய்களை தவிடுபொடி ஆக்கும் உங்கள் உடல் மசாஜ் எண்ணெய் தயார்!

குறிப்பு

 • சிறந்த பயணுக்கு புதிய குப்பைமேனி இலைகளையே பயன்படுத்தவும்.
 • முதல்தர அல்லது வீட்டில் தயார் செய்த தேங்காய் எண்ணெயையே பயன்படுதவும், முக்கியமாக குழந்தைகள் நலனுக்கு.
 • இயற்கை மஞ்சள் தூளையே பயண்படுத்தவும்.
 • எண்ணெய் சூடு தணிந்ததும் சேகரித்து வைக்கவுவைக்கவும்

 

மீண்டும் வேறொரு பதிவில் உங்களை சந்திக்கிறோம். அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்!

One thought on ““குப்பைமேனி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது