உலகின் மிக சிறிய பூக்கும் தாவரம் – வொல்ஃபியா இனங்கள்

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடர்_05

#உலகின்_மிகச்சிறிய_பூக்கும்_தாவரம்

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வொல்ஃபியா’!

என்ன இவை செடிகளா? என்று தானே யோசிக்கிறீர்கள்! ஆம் இவை செடிகள் தான். சொல்லப்போனால் இவை தான் உலகிலேயே மிக சிறிய பூப்பூக்கும் செடிகள். இவற்றின் சராசரி அளவு தான் என்ன?

இந்த ‘o’விற்குள் இன்னும் இரண்டு சிறிய வட்டங்கள் வரைந்தால் எவ்வளவு பெரிதாய் இருக்குமோ அவ்வளவு தான் இவற்றின் அளவு. இதையே 36 மணி நேரத்திற்கு பிறகு பார்த்தால் இரண்டு செடிகள் இருந்த இடத்தில் நான்கு செடிகள் இருக்கும். ஆம் இவை அவ்வளவு சீக்கிரத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இவைகளுக்கு இலைகளோ, வேரோ, தண்டோ, கிடையாது. இவைகளில் சில நேரங்களில் ஒரு சிறு பூவும் அதில் ஒரு களமும், ஒரு மலர் சூலகமும் காணப்படுகின்றது. நீங்கள் எந்த கண்டத்திலும் , அதின் குளத்திலேயோ ஆற்றிலேயோ பார்த்தாலும் இந்த செடியை காண நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதனை ‘டக் வீட்’ – வாத்து களை என்ற பெயரிலும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

எல்லாம் சரி இதனால் நமக்கென்ன பயன் என்கிறீகளா?கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல வொல்ஃபியா சிறுத்தாலும் சத்து குறையாது என்றே சொல்லலாம். ஆம் பார்க்க இவ்வளவு சிறியதாய் இருந்தாலும் இவை 40% புரதத்தால் ஆனவை. எனவே ஆசியாவிலுள்ள இவற்றின் இனங்களை நீரிலிருந்து வடிகட்டி உண்பதுமல்லாமல் கால்நடைகளுக்கும் தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது