உருளைக் கிழங்கு வளர்த்தல் [பாகம்-1]உருளைக் கிழங்கின் வகைகள்

Spread the Green love!

 

மிக எளிதாக வளர்க்கக்கூடிய கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இவை வளர்ப்பதற்கு வேடிக்கையானது அதுமட்டுமல்லாமல் இது குறைந்த இடத்திலேயே மிக சிறந்த மகசூல் அளிக்கக் கூடியது. இள வசந்தமே இவற்றை பயிரிடுவதற்கு ஏற்ற காலம். இனி வர இருக்கும் பதிவுகளில் இதை எளிதாய் வளர்க்கும் முறைகளை பற்றி பார்ப்போம்.

உருளைக் கிழங்கு வளர்ப்பதில் நமக்கு கிடைக்கும் அநேக வெகுமதிகளில் ஒன்று இதனை வளர்ப்பின் வெவ்வேறு நிலைகளில் நாம் பயன்படுத்தலாம். இளம் கிழங்குகளை (புது உருளை கிழங்குகள்) அறுவடை செய்து அதனை பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் பெரும்பாலான கிழங்குகளை முழுமையாக வளர விட்டு அதனை அறுவடை செய்து வருடம் முழுதும் சேமித்து பயன் படுத்தலாம்.
வகைகள்: சமையல் மற்றும் சுவைக்கு ஏற்ப எந்த உருளை வகையை வளர்ப்பது என தேர்ந்தெடுக்க வேண்டும். சில வகைகள் அடுதலுக்கும்(baking), சில வகைகள் ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கும்( French Fries), சில வகைகள் வேக வைப்பதற்கும் என இவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாம் ஒரு சில வகைகளை பற்றி பார்ப்போம்.

வெள்ளை ரோஸ்(WHITE ROSE) : அநேகமாக இவை தெரிந்து கொள்ளபட்ட்தில் சிறந்த வகை. இந்த இளம் உருளை வகையானது வேகவைப்பதற்கும் காய்கறி கலவைகளுக்கும்(vegetable salad) ஏற்றது. இருப்பினும் இவை சேமித்து வைப்பதற்கே மிக சிறந்ததாக கருதப் படுகிறது.

நெட்டட் ஜெம்(NETTED GEM): இவை மற்றுமொரு பிரபலமான வகை. வேக வைப்பதற்கு மிக சிறந்ததாக கருதப்படுகின்றன. ரஸட் பர்பாங்க்(Russet Burbank) என அழைக்க படும் இவை முற்றியதும் சேமித்து வைக்கலாம்.

கென்னபெக்(KENNEBEC): இவை தாமதமாக முதிரும் வகைகளுள் ஒன்று. இவை ஃப்ரென்ச் ஃப்ரைஸ்(French Fries) செய்வதற்கும், பொரிப்புகளுக்கும்(chips) மிக ஏற்றவை.

நார்கோல்ட் ரசெட் (NORGOLD RUSSET): இவை வேகவைப்பதற்கும், அடுதலுக்கும்(Baking) மிக சிறந்தவை. ஆனால் இவற்றை நன்றாக சேமித்து வைக்க முடியாது.

மஞ்சள் ஃபின்னிஷ்(YELLOW FINNISH): இவை சிறிய அளவும் மஞ்சள் உட்புறமும் கொண்டவை. இவை பல பயன்பாட்டுடையவை. ஆனால் இவற்றை நீண்ட காலம் சேமிக்க முடியாது.

சிவப்பு போன்டியாக்(RED PONTIAC): இவை நடுத்தர சிவப்பு தோல் வகையை சார்ந்தவை. இவற்றை நன்றாக சேமித்து வைக்க முடியும்.

சிவப்பு நார்லாண்டு(RED NORLAND): இவை நன்கு வட்டமான சிவப்பு வகையை சார்ந்தவை. இவை வேகவைப்பதற்கும் அடுதலுக்கும்(Baking) தகுந்தவை.

இதை தவிர நிறைய வகைகள் உள்ளன. அதில் சில வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றவை.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால் லைக் , ஷேர் செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த உருளை வகையை கமென்டில் பதிவு செய்யுங்கள்.

மீண்டும் உங்களை எங்கள் அடுத்த பதிவில்(உருளை வளர்ப்பதின் அடிப்படைகள்) சந்திக்கிறோம். அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது