செடிகள்தோட்டம்பன்னம்புதியதோர் தாவரம் அறிவொம் தொடர்

உயிர்தெழுதலின் செடி – எரிகோவின் ரோஜா

Featured Video Play Icon

#புதியதோர்_தாவராம்_அறிவோம்_தொடர்_01

#எரிகோவின்_ரோஜா

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் செடி எரிகோவின் ரோஜா! இதில் என்ன அப்படி ஸ்பெஷல் என பார்க்கிறீர்களா? இது உயிர்த்தெழும் செடி ‘Plant of resurrection’ என அழைக்கப்படுகின்றது.

உண்மையில் இரண்டு செடிகள் இந்த புனைப்பெயரால் அழைக்கப்படுக்கிறன. இவை இரண்டுமே உலருவதிலிரு‌‍ந்து தப்பி பிழைப்பதே இந்த செல்ல பெயருக்கு காரணம். நிஜ எரிகோ ரோஜாவானது (அனஸ்டாடிகா ஹைரோசுன்டிகா – Anastatica hierochuntica) மேற்கு ஆசியாவை சொந்தமாக கொண்டுள்ள அனஸ்டாடிகா ஜீனஸை சேர்ந்த ஒரே கடுகு குடும்ப செடி ஆகும். அட என்னப்பா ஏதேதோ சொல்றீங்கா? அப்படிங்குறீங்களா! சரி வாங்க இந்த பெயர் எதற்கு என்று பார்ப்போம். சாம்பல் நிறம் கொண்ட இச்செடி வறட்சி காலத்தில் தன் கிளைகளையும் விதைப்பைகளையும் தன்னிடமாக சுருட்டி கொண்டு ஈரம் படாதவரை பந்து போலவே இருக்கின்றது. சில சமயஙளில் பிடுங்கப்பட்டிருந்தால், காற்றில் பதரை போல பறந்தோ உருண்டோ சென்றாலும் இந்த நிலையிலேயே இவை பல ஆண்டுகள்வரை தாக்குபிடிக்கின்றன. இவற்றின் வேர்களில் ஈரம்பட்ட உடனே பச்சை பசேலென 1அடி அகலத்திற்கு தன் கிளைகளை விரித்து சிறு வெள்ளை பூக்களை மலர்விக்கின்றன.

பொய்யான எரிகோவின் ரோஜாவானது(செலாஞ்சினல்லா லெபிடோஃபைலா – Selaginella lepidophylla) ஐக்கிய நாடுகள் (United States) மற்றும் மெக்சிக்கோவிலுள்ள சிஹுஹுவா(Chihuahuan) பாலைவனத்தை சார்ந்த முள்-பாசி குடும்பத்தை சேர்ந்த செடி (செலாஞ்சினல்லசியே – Selaginellaceae). இவையும் வறட்சி காலங்களில் இறுக்கமான பந்தாக சுறுண்டு கொள்கின்றன. இவையும் பிடுங்கப்பட்டால் பதரை போல பறந்தோ உருண்டோ செல்கின்றன. ஆனால் நிஜ எரிகோவின் ரோஜாவை போலல்லாமல் வேரில்லை என்றாலும் இவை ஈரம் பட்டால் புத்துயிர் பெருகின்றன. இவை பாசி போல காணப்பட்டு ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. சில சமயங்களில் இவை மாறுதலாக விற்கப்படுகின்றன.

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முரை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...