செடிகள்பயன்கள்புதினாமூலிகைகள்

உடல் நலத்தில் புதினாவின் பங்கு

Featured Video Play Icon
Spread the Green love!

ஒவ்வாமை எதிர்ப்பு

புதினாவில் ரோஸ்மரினிக் அமிலம் (rosmarinic acid) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மைகள் கொண்ட ரசாயனம் இருப்பதால் இது ஒவ்வாமையை தடுப்பதற்கு உதவுகிறது.

சளி நிவாரணம்

புதினாவில் இருக்கும் மெத்தனால் சளியை கரைத்து அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. தேனீருடன் சேர்த்து பருகும் பொழுது மெத்தனாலில் இருக்கும் குளிர்ச்சி தன்மையானது தொண்டை கரகரப்பை போக்கும்.

அஜீரணம்

புதினா வயிற்று உபாதைகளை அடக்கும் தன்மை பெற்றது. புதினாவுடன் மிளகு சேர்த்து உண்டால் வாயு தொல்லையால் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றிலிருந்து ஆறுதல் கிடைக்கும்.

இரைப்பை உபாதைகள்

மது பானம் மற்றும் தொடர்ந்து உட்கொள்ளும் வலி நிவாரணிகளால் ஏற்படும் இரைப்பை புண்களை குறைப்பதில் மெத்தனால் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாய்வழி ஆரோக்கியம்

புதினா இயற்கையாகவே நுண்ணுயிர்களை அழித்து சுவாசப் புத்துணர்ச்சி தரும் தன்மை பெற்றது.

பூச்சிகளை விரட்டும் தன்மை

தோலில் பூச்சி கடியால் ஏற்படும் தடிப்புகளை போக்க புதினா உதவுகிறது.

 

மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறோம். அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்!

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...