இஞ்சியின் ஆரோக்கிய நலன்கள்

Spread the Green love!

பக்கவாதம் மற்றும் இருதய நோய்

இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை அனைத்திற்குமே இரத்த உறைதலை தடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றை ஒன்றாய் உட்கொண்டால் இவை இருதய நோய்களுக்கும், பக்கவாதத்துக்கும் சக்திவாய்ந்த எதிரியாக இருக்கின்றன.

அஜீரணம் மற்றும் குமட்டல்

வயிற்று வலியில் ஆரம்பித்து காலை பலவீனம் வரை(Morning Sickness) எல்லாவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது இது. இந்த காரணத்தால் தான் இஞ்சியை வயிறூதுதல், அஜீரண கோளாறு போன்ற உடல் உபாதைகளுக்கு இஞ்சியை பயன் படுத்துவர். உணவு அதன் வழியில் ஒழுங்காக செல்ல பயன்படுகிறது.

சுவாச செயற்பாடு

நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் ஆயுர்வேத மருந்தாக இது பயன்படுகிறது. இது உடலில் வெப்பத்தை உருவாக்குவதால் சுவாச உறுப்புகளில் உள்ள நச்சுக்களை உடைத்து அவற்றை நீக்க உதவுகிறது.

பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்குதல்கள்

இஞ்சிக்கு பாக்டீரியாக்களையும் பூஞ்சைகளையும் எதிர்க்கும் தன்மை உள்ளது. இதனை தொடர்ந்து தேநீர், இஞ்சி எண்ணெய் ஆகியனவாய் உட்கொண்டால் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் இதனை எதிர்த்து நிற்கவே முடியாது.

வயிற்று புண்

இஞ்சியின் வலி எதிர்க்கும் தன்மை, இதனை உடல் வலி, நெஞ்செரிச்சல், வயிறு மற்றும் குடற்புண்களால் ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் தருகிறது.

கேன்சரை எதிர்த்து போராடும்

இஞ்சியில் ஜிஞ்சரால்(Gingerol) இருப்பதால் இது புற்று நோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுத்து, கீமோதெரபியினால்(chemotherapy) வரும் வலியை குறைக்கிறது.

நீரிழிவு

ஜிஞ்சரால் நீரிழிவின் சிக்கல்களை குறைத்து, இன்சுலின் உணர்திறனை அதிகரித்து உடலில் சர்க்கரை அளவை சரியாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்!
நீங்கள் பகிர நினைக்கும் இஞ்சியின் பலனை கமென்ட் செய்யுங்கள்!
நாங்கள் உங்களை வேறொரு செடியின் வளர்ப்பில் உங்களை சந்திக்கிறோம்.அது வரை பயிரிட்டு மகிழுங்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது