இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

Spread the Green love!

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம்.

1# பாக்டீரியாக்களால் ஏற்படும் செடியின் வாட்டம் (Bacterial wilt of ginger)

அறிகுறிகள்

(பச்சை) இலைகள் பாதிக்கப்பட்டு சுருண்டு போவது (க்ரீன் வில்ட்); இலைகள் மஞ்சள் ஆகி பின் சிதைவது,செடியின் வளர்ச்சி குன்றிபோய் செடி இறப்பது, வேர்த் தண்டு(இஞ்சி) நிறம் இழந்து நீர் புகுந்து அழுகுவது போன்றவை.

குறிப்பு

இந்த நோய் தொற்று பாதிக்க பட்ட மண்ணிலிருந்து தான் பரவுகிறது. அதாவது மண்ணில் இருக்கும் செடிக்கழிவுகளில் குடியிருக்கும் பாக்டீரியாக்களால் இந்த தொற்று ஏற்படுகிறது.

கையாளும் முறை

நன்கு நீர் வடிய கூடிய, அதற்கு முன் இஞ்சி பயிரிடாத இடத்திலும் இஞ்சியை நட வேண்டும். பாதிக்க படாத இஞ்சி துண்டையே நட வேண்டும். இஞ்சியை மண் குவியலில் வளர்ப்பதன் மூலம் அதற்கு நல்ல காற்றோட்டமும் நீர் வடியும்வசதியும் ஏற்படுத்தி தரலாம். தரையில் நடும்போது இஞ்சிக்கு பயிர் சுழற்சியாக பாக்டீரியாக்களுக்கு இடங்கொடுக்காத பயிர்களை நடலாம்.

2# வண்டுகளால் வரும் பிரச்சினை

அறிகுறிகள்

எறித் துளை(shot hole) போன்ற துளைகள் இலையில் தோன்றுவது; இலையின் நரம்புகள் தவிர மற்ற பகுதிகளெல்லாம் அரிக்கப்படுதல்; சிவப்பு-பழுப்பு (reddish-brown) நிற வண்டுகள் செடியில் காணப்படுதல் போன்றவை.

குறிப்பு

இவை சைனீஸ் ரோஸ் பீடல்ஸ்(Chinese rose beetles) என அழைக்கப்படும் இரவு நேரத்தில் காணப்படும் வண்டு வகை.

கையாளும் முறை

இந்த வண்டுகள் மங்கலான ஒளியால் ஈர்க்கப் படுபவை; பிரகாசமான ஒளியாலோ துரத்த படுபவை(repell), எனவே செடிகள் மீது பிரகாசமான ஒளி வீச செய்வதால் அவற்றை தடுக்கலாம். செடிகள் வண்டுகளின் தாக்குதல்களை தாங்கும் வரை அவற்றின் மீது ஃப்ளோடிங் ரோ கவர்ஸ்(floating row covers) என அழைக்கபடும் ப்ளாஸ்டிக் கவர்களால் ஆன கூடாரம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம்.

3# உலர் அழுகல்(Dry rot )

அறிகுறிகள்

ஆரம்பத்தில் கீழ் பகுதிகளில் இருக்கும் இலைகளின் நுனி மஞ்சள் நிறமாய் மாறுதல் பிறகு இலை முழுதும் மஞ்சள் ஆக மாறுதல். நோய் பரவும் போது மேல் பகுதிகளில் இருக்கும் இலைகளும் மஞ்சளாய் மாறும். பின்னர் இலைகள் உலர்ந்து போய் செடியின் வளர்ச்சி குன்றிபோய் காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்த் தண்டுகளிடையே பழுப்பு நிற வளையங்கள் காணப்படும்.

குறிப்பு

இவை தண்ணீர் தேங்கும் நிலப்பகுதிகளில் நிறைய காணப்படும். எப்போதுமே இணைப்புகளில் தான் தோன்றும். மென்மையான அழுகலை பார்க்கும்போது இந்த வகை அழுகல்இருக்கும் இஞ்சி தண்டை அவ்வளவு எளிதாக மற்ற கிளை தண்டுகளிலிருந்து பிரிக்க முடியாது.

கையாளும் முறை

நடப்போகும் தண்டை போர்டாக்ஸ் கலவையில் விட்டு எடுப்பதன் மூலமும், மண்னை வெயிலில் காய வைப்பதன் மூலமும் இதனை தடுக்கலாம்.

4# வேர்த் தண்டு அழுகுதல்

அறிகுறிகள்

செடியின் வளர்ச்சி குன்றுதல், தண்டுகளில் நீர் கடத்தும் திசுக்கள் நிறம் இழந்து பழுபாபை தோன்றுதல்,வேர் அமைப்பு அழுகுதல், கருப்பாய் மாறுதல்,அழுகிய வேர்த் தண்டு (rhizome) துர்நாற்றத்தை வெளியிடும்.

குறிப்பு

வெதுவெதுப்பும் ஈரமுமான மண் இந்த நோய் தாக்குதலுக்கு ஏற்றது, இந்நோய் முக்கியமாக பாதிக்க பட்ட வேர்த்தண்டுகளிலிருந்து தான் பரவுகிறது அதிலும் அந்த நோய் தக்கிய வேர்த் தண்டு வெளியே எந்த அறிகுறியும் காண்பிப்பதில்லை.

கையாளும் முறை

நல்ல நீர் வடியும் மண்னிலும், மண் மேடுகள் அமைத்தும் இஞ்சியை நட வேண்டும், நோயின் அறிகுறி காணப்படும் தண்டுகளை நட வேண்டாம், அத்தண்டுகளை வெது வெதுப்பான நீரில்(50°C) பத்து நிமிடங்கள் ஊறவைத்து பின் நடலாம் அல்லது தகுந்த பூஞ்சை ஒழிப்பானை பயன் படுத்தலாம். அறுவடையின் பின் மிச்சமிருக்கும் செடி கழிவுகளை உடனே அகற்றுவது நல்லது, வளர்க்கும் பகுதிகளை களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும், இஞ்சி வளர்க்கும் பகுதியில் ஒரு வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடவேண்டும்.

5# வேர் முடிச்சு நூற்புழு மற்றும் துளையிடும் நூற்புழு

அறிகுறிகள்

வேர் முடிச்சு நூற்புழு : தண்ணீர் நிறைந்த வீக்கங்கள் வேர்களில் தோன்றுவது,வேர்களில் 3.3செ.மி வரையிலான கட்டிகள் தோன்றுவது, செடியின் வீரியம் குறைவது, செடிகள் மஞ்சளாய் மாறி வெப்ப காலத்தில் உலர்வது.

துளையிடும் நூற்புழு : வேர்த் தண்டுகளில் சிறிய நீர் நிறைந்த வீக்கங்கள் தோன்றி பின்னர் அவை பழுப்பாய் மாறுவது. இந்த வீக்கங்கள் எல்லாம் சேர்ந்து அழுகலுக்கு வித்திடும். பாதிக்கபட்ட செடிகள் மஞ்சள் இலைகளை உடையதாயும், சிறு அளவே தளிர்கள் கொண்டதாயும், இலைகள் உதிர்வதாயும் ஆன அறிகுறிகள் காணப்படும்.

கையாளும் முறை

இந்த பாதிப்பை சரி செய்வது கிட்டத்தட்ட கூடாத காரியம் ஆகும். அதனை தடுப்பதே சிறந்தது அதற்கு சுத்தமான களங்களை உபயோகிப்பதும் பாதிக்கப்படாத மண் மற்றும் வேர்த் தண்டுகளை பயன்படுதுவதுமே வழி. நூற்புழு கொல்லிகளையும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இஞ்சி வளர்ப்பின் அடிப்படைகளை பற்றி அறிய முந்தைய பதிவை பார்க்கவும்.

தொடர்ந்து எங்களை ஆதரியுங்கள்! பயிரிட்டு மகிழுங்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது