அஷ்வகந்தா வளர்ப்பு.

Spread the Green love!

 

withania-somnifera-ashwagandha-plant-picஅஷ்வகந்தா, இதனை அமுக்கரா கிழங்கு என்று தமிழிலும், இன்டியன் வின்டெர் செர்ரி (Indian Winter Cherry) என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றனர் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக   வரும் ஒரு பலம் வாய்ந்த மூலிகை இது. தக்காளி குடும்பத்தின் உறுப்பினரான இது தன்னிடம் நிறைய குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது.

இத்தனை சக்தி வாய்ந்த அமுக்கராவினை நம் வீட்டில் வளர்ப்பது உண்மையில் எளிதானது தான். அஷ்வகந்தா வளர்ப்பதை குறித்து பார்ப்போம்.

அஷ்வகந்தாவின் தாவரவியல் பெயர் (botanical name) வித்தானியா சோம்னிஃபெரா (Withania somnifera)ஆகும். இது விதையிலிருந்து வளர கூடிய செடி வகை. இவை மூன்று அடி வரை வளர கூடியவை.

இவை வளர தேவையான சூழலை பற்றி முதலில் பார்ப்போம்.

சூரிய ஒளி

 • இவை ஒளி விரும்பிகள்.
 • எனவே இவற்றை வளர்க்க இடம் தேர்ந்தெடுக்கும் போது, அவற்றிற்கு அதிக பட்சமாக 8 மணி நேரம் சூரிய ஒளி படுமாறு தேர்ந்தெடுக்க வேண்டும்.

image-2வெப்பம்

 • இவற்றால் லேசான வறட்சியை தாங்க முடியும்.
 • இவற்றை வீட்டிற்குள் வளர்க்க 20-35 டிகிரி செல்சியஸ்(degree Celsius) வெப்பம் தேவைப்படும்.

மண்

 • நல்ல உரம் நிறைந்த நீர் வடிய கூடிய மண் கலவையை பயன்படுத்த வேண்டும்.
 • இத்தகைய தொட்டி கலவையையும்(pot mix) பயன்படுத்தலாம்.
 • பொதுவாக மென்கார(Basic) மண் இவை வளர ஏற்றவை.
 • கார அளவு எண்(pH level) 7.5-8 இவை வளர பொருத்தமானது.

imagesநடவு

 • இவற்றின் விதைகளை 2செ.மீ.(cm) ஆழத்தில் நட வேண்டும்.
 • வரிசையாக நடுவதாய் இருந்தால் ஒவ்வொரு விதைக்கும் இடையில் 10 செ.மீ(cm) இடைவெளி விடுவது நல்லது.

நீர்பாய்ச்சல்

 • தேவையானபோது மட்டும் அதாவது மண் காய்ந்திருந்தால் மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
 • அதிகமாக தண்ணீர் ஊற்றுவதும் தண்ணீரை தேங்க விடுவதும் நல்லதல்ல. இவை செடியின் வளர்ச்சியை தடுக்கும்.

maxresdefaultஉரம்

 • அஷ்வகந்தாவில் உள்ள மற்றுமொரு தன்மை என்னவென்றால், இவை மருத்துவ குணம் வாய்ந்தவை ஆதலால் இவற்றிற்கு நோய் தொற்று ஏதும் பொதுவாக ஏற்படுவது இல்லை.
 • எனவே இவற்றிற்கு தனிவகையான உரங்கள் ஏதும் தேவைபடுவதில்லை.
 • இருப்பினும் நல்ல எரு(manure), கலப்புரம்(compost) ஆகியவற்றை இடுவதன் மூலம் சிலந்தி பூச்சிகளிடமிருந்து இவற்றை காக்க முடியும்

ashwagandha-625_625x350_71442916378அறுவடை:

 • மணி வடிவ(bell shaped) பூக்கள் தோன்றுவதும், சிவப்பு நிற பழங்கள் தோன்றுவதும் செடி முழுமையாக வளர்ந்து விட்டன என்பதை குறிப்பது மட்டுமல்லாமல் அவை அறுவடைக்கு தயார் ஆகி விட்டன என்பதையும் குறிக்கின்றன.
 • இந்நிலையை அடைய 5 மாதங்கள் வரை ஆகும்.
 • இச்செடியின் வேர்களை எடுத்து காயவைத்து பத்திரபடுத்தி வைக்க வேண்டும்.

இதை வைத்து என்ன செய்யலாம்? இது எதற்கு பயன்படும்? இவை பற்றி எங்கள் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறோம். சரி இப்போது இவற்றை விதைப்போம் வாருங்கள்!

 

One thought on “அஷ்வகந்தா வளர்ப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது