அஷ்வகந்தாவின் பயன்கள்

Spread the Green love!

இந்த பதிவில் ‘அஷ்வகந்தாவின் பயன்கள்’ மற்றும் ‘எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது’ என்பதை பற்றி பார்ப்போம்.

அஷ்வகந்தாவின் பயன்கள்:

1

அஷ்வகந்தா உடலை ஊக்குவித்து, உடலின்  செயல்பாடுகளுக்கு புத்துயிர் தருகின்றது. இது ஒரே நேரத்தில் நமக்கு சக்தி ஊட்டுவதுடன் மனதை அமைதி பெறவும் செய்கிறது. மன அழுத்தம் நமக்கு சோர்வளிப்பதுடன், அமைதியின்மையயும் தூங்குவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது. அஷ்வகந்தாவிலிருந்து கிடைக்கும் ஊக்கத்தின் மூலம் மன அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கலாம். இதன் மூலம் நரம்பு மண்டலம் வலிமையாகின்றது. இந்த பலன்களை தவிர அஷ்வகந்தாவின் வேறு சில பயன்களை பார்ப்போம்.

 

inflammation

அழற்சி நீக்கி(Anti inflamatory)

 • ஆராய்ச்சியின்படி அஷ்வகந்தாவிற்கு அழற்சி நீக்கும் தன்மை உள்ளது. அதனால் இதனை ருமாடிக் (rheumatic) பிரச்சனைகளுக்கு உபயோகிக்கலாம். அத்துடன் இதற்கு வீக்கம் மற்றும் வலியை நீக்கும் தன்மையும் உள்ளது.

ஆன்டிபாக்டீரியல் (Antibacterial)

 • ஆயுர்வேதத்தின்படி அஷ்வகந்தாவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. இதானால் இது யூரினல் (urinal), இரைப்பை-குடல் (gastro-intestinal) மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்த பயன்படுத்த படுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு(Anti-Carcinogenic)

 • புற்றுநோயியலில்(Oncology) பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலிகை இது. இதற்கு புற்று நோய் செல்களையும், புற்றுநோய் கட்டிகளையும் அழிக்கும் தன்மை உள்ளது. இது உடலை கீமோதெரபியின் (Chemotherapy) பக்க விளைவுகளிலிருந்து காக்கிறது.

இதய பாதுகாப்பு

 • அஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை படுத்துகிறது. கொழுப்பை (cholesterol) கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

நீரிழிவை எதிர்க்கிறது

 • 6ஆயுர்வேதத்தில் இதனை நீரிழிவை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து நான்கு வாரங்கள் உட்கொண்டுவந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.

மன அழுத்த நிவாரணி

 • featuredஇது எப்படி மனஅழுத்தத்தை குறைக்கிறது என்பது இன்னும் சரியாக அறியபடவில்லை. எப்படி இருந்தாலும் இது மனதை அமைதி படுத்துவதுடன் பதற்றத்தையும் குறைக்கிறது. எனவே இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஹைப்போ தைராய்டிசத்தை(Hypothyroidism) எதிர்க்கிறது

 • 3இது தைராய்டு (thyroid) சுரப்பியினை தூண்டி தைராய்டு சுரப்பை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் ஹைப்போ தைராய்டு பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது.

இரத்த உற்பத்தி

 • blood-cells_12-red-blood-ceஅஷ்வகந்தாவிற்கு புது இரத்த அணுக்களை உருவாக்கும் தன்மை உள்ளது. எனவே இது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பாலியல் பிரச்சனைகளை தீர்க்கிறது

 • இது ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

எப்படி அஷ்வகந்தாவை அனுதின உணவில் சேர்த்துக்கொள்வது?

 •  பாரம்பரியமாக அஷ்வகந்தா பொடியினை வெதுவெதுப்பான பால் மற்றும் தேனுடன் கலந்து படுக்குமுன் உட்கொள்கிறார்கள்.
 • பொதுவாக ¼ அல்லது ½ தேக்கரண்டி தூளினை ஒரு நாளிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சேர்த்துக்கொள்ளலாம்.
 • தேனிற்கு பதிலாக சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம், இது விசேஷமாக கோடைக்காலத்தில் குளிர்ச்கியை தருகிறது.
 • பொதுவாக அஷ்வகந்தா டீ உட்கொள்ளலாம்.

அஷ்வகந்தா டீ:11

 • அஷ்வகந்தா பொடியினை 10 நிமிடம் நீரில் கொதிக்கவைத்து ( அஷ்வகந்தா வேரினையும் சிறிது நேரம் கூடுதலாக கொதிக்க வைத்து பயன் படுத்தலாம்) டீ செய்து குடிக்கலாம்.
 • இதில் டீயில் பொதுவாக சேர்க்கப்படும் மற்ற மூலிகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
 • அஷ்வகந்தா பொடியினை பாலில் கலந்தும் குடிக்கலாம்.

 

இந்த பதிவிலிருந்து அஷ்வகந்தாவின் எண்ணற்ற பலன்களை அறிந்திருப்போம். பிறகென்ன வாருங்கள் பயிர் செய்து பலனை அறுப்போம்.

 

மேலும் காணொளிகளுக்கு (videos) எங்கள் யூ ட்யூப் சேனலை(YOUTUBE CHANNEL) சப்ஸ்க்ரைப்(subscribe)

2 thoughts on “அஷ்வகந்தாவின் பயன்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது