ஆர்கிட்கள்

வேஷம் போட்டு ஏமாற்றும் பூக்கள் உஷார்! – தேனீ ஆர்க்கிட்கள்

Posted on

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_10 #தேனீ_ஆர்க்கிட்கள் #வேஷதாரி_செடிகள் இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘தேனீ ஆர்க்கிட்கள்’!. தேனீ ஆர்க்கிட்கள் பார்க்க அழகாக இருக்கும் இந்த பூக்கள் இயற்கையாகவே வேஷதாரிகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இவற்றின் பெயருக்கேற்ப இத்தாவரத்தின் பூக்களை பார்க்கும்போது ஒரு பெண் தேனீயோ அல்லது பெண் குளவியோ இந்த பூக்களின் மேல் […]

எப்படி பராமரிப்பது?

​மல்லிகையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் (மல்லிகை வளர்ப்பு பாகம் 2)

Posted on
Featured Video Play Icon

மல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.

எப்படி வளர்ப்பது?

மல்லிகை வளர்ப்பதெப்படி?

Posted on
Featured Video Play Icon

  மல்லிகை நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு மலர். அதனுடைய நறுமணம் மற்றும் அழகிய சிறிய வெள்ளை மலர்கள் அனைவரையும் கவரக்கூடியவை. இந்தியவில் பொதுவாக மூன்று வகையான மல்லிகை பூக்கள் உண்டு.

உருளை கிழங்கு

உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

Posted on

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

உருளை கிழங்கு

உருளைக்கிழங்கு வளர்ப்பு (பாகம்-2)

Posted on

இடம் உருளைக்கிழங்கு வளர்ப்பதற்கு இடம் திறந்த வெளியாகவும் சூரிய ஒளி அதிகம் படும் வகையிலும் இருக்க வேண்டும். உருளைக்கிழங்கிற்கு வளமான மற்றும் நன்றாக வடிகால் இருக்கக் கூடிய நிலமாக இருக்க வேண்டும். இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாக உருளைக் கிழங்கு விளைந்த இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லதில்லை ஏனென்றால் நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு அதில் அதிகம். காரத் தன்மை (alkaline) அதிகம் இருக்கக் கூடிய நிலமானது உருளை வளர்ப்பிற்கு நல்லது.

உருளை கிழங்கு

உருளைக் கிழங்கு வளர்த்தல் [பாகம்-1]உருளைக் கிழங்கின் வகைகள்

Posted on

  மிக எளிதாக வளர்க்கக்கூடிய கிழங்கு வகைகளில் உருளைக் கிழங்கும் ஒன்று. இவை வளர்ப்பதற்கு வேடிக்கையானது அதுமட்டுமல்லாமல் இது குறைந்த இடத்திலேயே மிக சிறந்த மகசூல் அளிக்கக் கூடியது. இள வசந்தமே இவற்றை பயிரிடுவதற்கு ஏற்ற காலம். இனி வர இருக்கும் பதிவுகளில் இதை எளிதாய் வளர்க்கும் முறைகளை பற்றி பார்ப்போம்.

இஞ்சி

இஞ்சியின் ஆரோக்கிய நலன்கள்

Posted on
Featured Video Play Icon

பக்கவாதம் மற்றும் இருதய நோய் இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை அனைத்திற்குமே இரத்த உறைதலை தடுக்கும் தன்மை கொண்டவை. இவற்றை ஒன்றாய் உட்கொண்டால் இவை இருதய நோய்களுக்கும், பக்கவாதத்துக்கும் சக்திவாய்ந்த எதிரியாக இருக்கின்றன.

இஞ்சி

இஞ்சிக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் (இஞ்சி வளர்ப்பு பாகம்-2 )

Posted on
Featured Video Play Icon

முதலாவது நீங்கள் எங்கள் கடந்த பதிவுக்கு அளித்த பெரும் வரவேற்பிற்காக நன்றி! அதனால் அடுத்த செடியின் வளர்ப்பு பற்றின பதிவிற்கு போகுமுன் நீங்கள் எங்களிடம் கேட்டதை உங்களுக்கு அளிக்க விரும்பினோம் அதுவே இந்த பதிவு. ஆம் இந்த பதிவில் சிலர் கேட்டுகொண்டதற்கு இணங்க இஞ்சி செடிக்கு வரும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றியும் பார்ப்போம். 1# பாக்டீரியாக்களால் ஏற்படும் செடியின் வாட்டம் (Bacterial wilt of ginger) அறிகுறிகள் (பச்சை) இலைகள் பாதிக்கப்பட்டு […]

இஞ்சி

இஞ்சி வளர்ப்பு

Posted on
Featured Video Play Icon

  (Zingiber officinale) வளர்ப்பது அநேகருக்கு ஒரு புதிராகவே இருக்கலாம். இதற்கு சாட்சியாக இஞ்சியை நாம் பொதுவாக கடைகளில் பார்க்க முடியும் ஆனால் நர்சரிகளில் அச்செடியினை காண முடியாது. சரி இப்போது இஞ்சியை வீட்டில் வளர்க்க முடியுமா முடியாதா? விடை முடியும் என்பதே! அதுமட்டுமல்லாமல் அதை வளர்ப்பது எளிதானதும் கூட. வாருங்கள் எப்படி இஞ்சியை வீட்டில் வளர்ப்பது என பார்ப்போம்.

செடிகள்

உடல் நலத்தில் புதினாவின் பங்கு

Posted on
Featured Video Play Icon

ஒவ்வாமை எதிர்ப்பு புதினாவில் ரோஸ்மரினிக் அமிலம் (rosmarinic acid) எனப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற தன்மைகள் கொண்ட ரசாயனம் இருப்பதால் இது ஒவ்வாமையை தடுப்பதற்கு உதவுகிறது. சளி நிவாரணம் புதினாவில் இருக்கும் மெத்தனால் சளியை கரைத்து அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. தேனீருடன் சேர்த்து பருகும் பொழுது மெத்தனாலில் இருக்கும் குளிர்ச்சி தன்மையானது தொண்டை கரகரப்பை போக்கும். அஜீரணம் புதினா வயிற்று உபாதைகளை அடக்கும் தன்மை பெற்றது. புதினாவுடன் மிளகு சேர்த்து உண்டால் வாயு தொல்லையால் […]