எங்களைப்பற்றி

     வணக்கம்! இந்த வலைப்பக்கத்தின் மூலம் விவசாயத்தை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம். ஆனால் அதனை எளிதாக செய்து விட முடியாது என்பது எங்களுக்கு தெரியும். எனவே என்ன செய்வது என யோசித்தோம்! சில பல யோசனைகளுக்கு பின்னால் இப்படி ஒரு வலைதளத்தை நிறுவ வேண்டும் என முடிவு செய்தோம்.

ஆனால் எடுத்ததும் எப்படி வலைத்தளம் ஆரம்பிப்பது? அதில் என்ன பதிவிடுவது? என பல யோசனைகளும் கேள்விகளும் எங்களுக்கும் இருந்தது. எனவே நம் கருத்தினைஎப்படி வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை பற்றி புரிந்து கொள்ள முதலில் முகப்புத்தகத்தில் – எனிபடி கன் ஃபார்ம் (Anybody Can Farm) என்று ஒரு பக்கத்தை தொடங்கினோம். நாங்கள் யோசித்தவாறே பல தோல்விகள் இதுவரை கண்டுள்ளோம். அதுசரி இது போன்ற பக்கங்களை விரும்புவோர் இங்கு யார் இருக்கிறார்கள்? ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட உள்ளங்களும் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்த நாங்கள் மக்களிடம் புது முயற்சியாய் தமிழிலும் பதிவிட ஆரம்பித்தோம்.

இப்போது இங்குள்ளோம்! இதையெல்லாம் ஏன் நீங்கள் படிக்க வேண்டும்? ஏனென்றால் எங்கள் கனவு இதோடு முடியவில்லை. விவசாயததை எளிமையாக்குவது, அங்கக(Organic) விவசாயத்திற்கு வழிகள், வீட்டிலேயே விவசாயம், நகரத்திலும் விவசாயம், எல்லா உழவியல் தொழிட்நுட்பத்தை தமிழில் எளிமையாக கொண்டு வருவது, நம் முப்பாட்டர்களின் விவசாய முறைகளை எப்படி நவீன படுத்துவது, விவசாய கல்வி…. என எங்களுக்கு நிறைய கனவுகள் உள்ளது. இதன் முதற்படியாக நீங்கள் இந்த வலைதளத்தில் பார்க்கும் –  எப்படி வளர்ப்பது?’, ‘எப்படி பராமரிப்பது?’ ‘புதியதோர் தாவரம் அறிவோம்!’ இப்படி சிறு பதிவுகள் மூலம் மக்களிடம் உழவினைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம்! விரைவில் சமையல் பக்கமும் சிறிது இறங்க உள்ளோம். ஒரு நாள் இன்னும் சாதிப்போம் என நம்புகிறோம்!

இந்த பக்கம் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எங்களுக்கு சந்தேகங்கள் இல்லை. நாங்கள் வளர உங்களிடம் யோசனைகள் இருந்தால் அதனை உற்சாகமாக வரவேற்கிறோம். ஒன்றாய் உழவ பழகுவோம்! நாளை படைப்போம்!

 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.