உருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி?

கொள்கலன்களில் உருளைக்கிழங்கினை வளர்ப்பதன் மூலம் நீங்கள் இடப்பிரச்சனையை அழகாக சமாளிக்கலாம். உருளைக்கிழங்குகளை கொள்கலன்களில் பயிரிடுவதன் மூலம் அதனை எளிதாக அறுவடை செய்யலாம் ஏனெனில் எல்லா கிழங்குகளும் ஒரே இடத்தில் இருக்கும். உருளைக்கிழங்குகளை கோபுரங்களில், குப்பை தொட்டிகளில்(waste paper basket), வளர் பைகளில்(Grow bags), ஏன் சாக்குகளில் கூட வளர்க்கலாம். இந்த முறை மிக சுலபமானது. விதைப்பிலிருந்து அறுப்பு வரை முழு குடும்பமாக பங்கு கொண்டு மகிழ கூடிய செயல்முறை இது.

கொள்கலன் உருளைக்கிழங்கு தோட்டம்

கொள்கலன்களில் வளர்க்க சிறந்த வகை சீக்கிரத்தில் முதிர கூடிய உருளைக்கிழங்குகளே ஆகும். சிறந்த நோயற்ற கிழங்குகளை விதைகளுக்காக எடுத்து கொள்ளுங்கள். பொதுவாக 70-90 நாட்களுக்குள் வளரக்கூடிய வகைகளை தேர்ந்தெடுப்பது பரிந்துரைக்கத்தக்கது. உங்களுக்கு மிகவும் பிடித்த வகைகளை கூட நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் சில வகைகள் முதிர 120 நாட்கள் வரை எடுக்கும் அவற்றை தவிர்ப்பது நல்லது.Grow-bags-with-potatoes1

உருளைக்கிழங்கு வளர்க்க நிறைய முறைகள் இருக்கின்றன. பொதுவாக மண்னில் வளர்ப்பது தான் வழக்கம் ஆனால் நன்கு வடிய கூடிய வேறு எந்த ஊடகமானாலும்(medium) உபயோகிக்கலாம். பர்லைட் என்னும் ஒரு வகையான ஊடகத்தை கூட பயன்படுத்தலாம். நீங்கள் ரப்பர் அல்லது நெகிழி(plastic) கொள்கலன்களை பயன்படுத்துவதாய் இருந்தால் நீர் வடிவதற்காக நிறைய துவாரங்களை இட்டுகொள்ளுங்கள். நீங்கள் அடர்த்தியான சாக்குப்பைகளை கூட பிரயோகிக்கலாம், அவற்றால் சுவாசிக்கவும் நீர் வெளியேற்றவும் முடியும். நீங்கள் எந்த கொள்கலனை பயன்படுத்துவதாயிருந்தாலும் சரி மேலும் மண் இடுவதற்கு இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்வதன் மூலம் இன்னும் நிறைய கிழங்குகள் வளர நாம் செடியை ஊக்குவிக்கலாம்.

எங்கு வளர்ப்பது?3921403205_3fec2f0e19

சுமார் 6-8 மணி நேர சூரிய வெளிச்சமும், 16ºசெல்சியஸ் வெப்ப நிலையும் இதற்கு ஏற்றதாகும். புது கிழங்குகளை  அறுவடை செய்ய இதனை டெக்குகளில் வளர்ப்பது நல்லது. இதற்கு உங்கள் சமையலறை பக்கத்திலேயே ஒரு தொட்டியிலோ, அல்லது உங்கள் வீட்டின் உள் முற்றத்தில்  ஒரு 20 லிட்டர் வாளியிலோ உருளைகிழங்கினை வளருங்கள்.

எப்படி வளர்ப்பது?pot (1)

உருளைக்கிழங்குகளை பனிக்காலத்திற்கு பிறகு பயிரிடுங்கள். நல்ல நீர் வடிய கூடிய மண்ணுடன் பொறுமையாக கலக்க கூடிய கரிம உரங்களை கலந்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிது ஈரப்பதமுடைய இந்த கலவையை கொள்கலனில்  4-அங்குலம் அளவிற்கு நிரப்பவும். நீங்கள் விதைக்க இருக்கும் கிழங்குகளை 2 அங்குல துண்டுகளாக துண்டித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு துண்டிலும் நிறைய முளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். சின்ன கிழங்குகளை அப்படியேவும் நடலாம். துண்டுகளை 5-7 அங்குல இடைவெளியில் நடவும், பின்னர் அவற்றை 3 அங்குலம் ஈர மண்ணினால் மூடவும். இந்த உருளைக்கிழங்கு செடிகள் 7 அங்குல உயரம் வரை வளர்ந்தவுடன் மேலும் மண் இட்டு அதனை மூடவும். இப்படி கொள்கலன் நிரம்பும் வரை செய்துகொண்டே வரவேண்டும். கொள்கலன்களில் வளர்க்கும் உருளைக்கிழங்குகளுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படும் அதே நேரத்தில் நீர் தேங்காதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அறுவடைPotatoes3

உருளைக்கிழங்கு செடிகள் பூ பூத்து, மஞ்சளாய் மாறியவுடன் கிழங்குகளை அறுவடை செய்யலாம். புது கிழங்குகளை பூ பூப்பதற்கு முன்னமே அறுவடை செய்யலாம். தண்டு மஞ்சளாய் மாறியவுடன் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டு ஒரு வாரம் காத்திருக்கவும். பின்னர் கிழங்குகளை தோண்டியோ அல்லது கொள்கலன்களை காலி செய்து அதிலிருது கிழங்குகளை எடுத்துக்கொள்வதோ எது வேண்டுமானாலும் செய்யலாம். பின்னர் கிழங்குகளை சுத்தப்படுத்தி, குணப்படுத்தி, சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்!

உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு அளியுங்கள்! எங்களை நீங்கள் கீழ்காணும் சமூக ஊடகங்களில் பின்தொடரலாம்.

நன்றி! பயிரிட்டு மகிழுங்கள்!

You may also like...

ஊங்கள் கருத்துக்களை எங்களுட்ன் பகிருங்கள்...